ஏற்காட்டில் கடும் குளிர்...பொதுமக்கள் அவதி!

Yercaud
Yercaud
Published on

ஏழைகளின் ஊட்டியென அழைக்கப்படும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகின்றது. அதனால் வாகனங்கள் மின் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.

சுற்றுலாத்தலங்கள் என்றாலே முதலில் மக்களின் நினைவிற்கு வருவது ஏற்காடு தான். ஏற்காட்டிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்கு ரோஜா தோட்டம், படகு சவாரி மற்றும் வியூ பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சுற்றி பார்க்க இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு குறைவே கிடையாது.

சீசன் போது மட்டுமின்றி மற்ற நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவதே இல்லை. சுற்றுலாப் பயணிகள் கடும் குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் ஏற்காட்டுக்கு வருகை தருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இட்லி மீந்து போச்சா? இப்படி செஞ்சு அசத்துங்கள்..!
Yercaud

ஏற்காடு மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனை சீரமைத்து உடனடியாக போக்குவரத்தை மீண்டும் தொடங்கினார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்காட்டில் பனிப்பொழிவு காணப்படுகின்றது. கடுங்குளிர் நிலவிவரும் நிலையில் மாலையில் இருந்து காலை வரை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.

வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே செல்கின்றனர். பணி மூட்டம் காரணமாக எதிரே யார் நிற்கிறார்கள் என்று கூட தெரியாத சூழல் நிலவி வருவதினால் மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
தப்பி தவறி கூட இந்த திசையில செருப்பை கழட்டாதீங்க... கழட்டுனா அவ்வளவுதா..!
Yercaud

பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். மாலை 3 மணிக்கு மேல் தொடங்கும் உறை பணி மறுநாள் காலை 11:00 மணி வரை நீடிக்கின்றது பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது.

இன்று காலை கடும் உறை பணி நிலவியது. அதனால் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். ஏற்காட்டில் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. தொடர் பனி மற்றும் குளிரின் காரணமாக பொதுமக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com