ஜெர்மனியில் வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டாப் 6 துறைகள்!

Payanam articles
top 6 jobs in german
Published on

னைத்து துறைகளிலும் ஜெர்மனியில் தகுதியான பணியாளர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஜெர்மனியின் வெளியுறவு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளமான Deutschland.de வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தற்போது நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அந்த வகையில் பொறியியல் முதல் பசுமை ஆற்றல் துறை வரை, தற்போது ஜெர்மனியில் மிக அதிக தேவை உள்ள ஆறு முக்கியமான தொழில்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

பொறியாளர்கள் (Engineers)

ஜெர்மனியின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன், தொழில்துறை 'இண்டஸ்ட்ரி 4.0' என்ற டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வேகமாக மாறி வருவதால் திறமையான அமைப்புகள் வடிவமைத்தல், உற்பத்தி மேம்பாடு, அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளுக்கு பொறியாளர் களின் நிபுணத்துவம் இன்றியமையாததாக உள்ளதால் ஜெர்மனியில் அதிகம் தேடப்படும் நிபுணர்களில் பொறியாளர்கள் உள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் (IT Specialists)

ஐரோப்பாவிலேயே தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக ஜெர்மனி உள்ளதால் இங்கு தொழில்நுட்ப வல்லுநர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. நாடு முழுவதும் சுமார் 1,49,000 தகவல் தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதோடு, இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் (Cybersecurity Experts), மென்பொருள் உருவாக்குநர்கள் (Software Developers),தரவு ஆய்வாளர்கள் (Data Analysts) மற்றும் நெட்வொர்க் நிர்வாகிகள் (Network Administrators) என டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தேவை அதிகமாக உள்ளது.

செவிலியர்கள் (Nursing Professionals)

ஜெர்மனியின் சுகாதார அமைப்பு மக்கள் தொகை வயதாகி வருதல் மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பு காரணமாக கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதால் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் சுமார் 35,000 காலியிடங்கள் உள்ளன. சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு ஜெர்மனியில் மிகப்பெரிய அங்கீகாரம் உள்ளது.

கைவினைத் தொழிலாளர்கள் (Craftsmen)

ஜெர்மனியின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் மத்திய-அளவிலான நிறுவனங்களின் (Mittelstand) அடிப்படைத் தேவையைத் திறமையான கைவினைத் தொழிலாளர்கள் பூர்த்தி செய்தாலும், தச்சர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் மற்றும் மெக்கானிக்ஸ் போன்ற பல வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளன. திறமையான வர்த்தக துறையில் ஜெர்மனியில் பயிற்சி பெறும் மாணவர்களில் 29 சதவீதம் பேர் இருந்தாலும், கைவினை தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து பணியாளர்கள் (Transport Professionals)

ஐரோப்பாவிலேயே ஜெர்மனியின் தளவாடத் துறை (Logistics Sector) சரக்கு போக்குவரத்து முதல் பொது போக்குவரத்து வரை அனைத்தையும் உள்ளடக்கி பெரிதானதாக இருக்கிறது. ஆகவே பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேருந்து, ரயில் அல்லது கப்பல் மூலமாக நகர்த்துவதற்கு திறமையான போக்குவரத்து பணியாளர்களின் தேவை அதிகரித்து

ஜெர்மனியின் பொருளாதார எந்திரத்தின் அத்தியாவசிய பகுதியாக ஓட்டுநர்கள் மாறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
டிசம்பரில் ஜில்! தென்னிந்தியாவின் சிறந்த 5 கடற்கரை சொர்க்கங்கள்!
Payanam articles

இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் பசுமை வேலைகள் (Natural Scientists and Green Jobs)

ஜெர்மனியின் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் முக்கியமாகும். நிலையான வளர்ச்சி ஜெர்மனியின் முக்கியமான நோக்கமாக இருப்பதால், வேதியியல், இயற்பியல், சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் அறிவியலில் உள்ள இயற்கை விஞ்ஞானிகளுக்கு பல்கலைக்கழகங்கள், பொது ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பரந்த வாய்ப்புகள் உள்ளதோடு, போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி மற்றும் எரிசக்தி துறை முழுவதும் "பசுமை வேலைகள்" (Green Jobs) பெருகி வருகிறது.

வேலை தேடுபவர்கள் ஜெர்மனியில் இந்த ஆறு துறைகளில் சென்றால் அவர்களுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com