

தேனி மாவட்டத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏகப்பட்ட பகுதிகள் உள்ளன. தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளன. தேயிலை தோட்டங்கள் சுருளி நீர்வீழ்ச்சி மணலார் அணை மேகமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் கும்பக்கரை அருவி போடி மெட்டு கௌமாரி அம்மன் கோவில் போன்ற சிறப்புமிக்க பகுதிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை சூழ்ந்த இடங்களும் நம்மை வரவேற்கிறது
அக்டோபர் முதல் மே மாதம் வரை பார்வையிட சிறந்த நேரமாகும்.
மேகமலையில் இயற்கை காடுகள் தேயிலை தோட்டங்கள் நிரம்பி வழிகிறது. மேகமலை பச்சம்மா குச்சி என அழைக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பசுமையாக உள்ளதால் இந்த பெயர் வந்தது. 18 ஊசி வளைவுகள் உள்ளன. அதில் வளைந்து நெளிந்து செல்வது புதிய அனுபவமாக இருக்கும். மூடுபனி இந்தப் பகுதியில் நிரந்தரமாக உள்ளது. தேயிலை தோட்டங்கள் பசுமையான போர்வையை போர்த்தியது போன்று காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது இந்த மேகமலை பகுதி. தேயிலை தோட்டங்களும் ஏலக்காய் தோட்டங்களும் அதிகம் காணப்படும் பகுதி ஆகும்.
இதமான வானிலை கண்கவர் காட்சிகள் மென்மையான காற்று நம்மை வரவேற்கிறது. இங்கு வனவிலங்கு சரணாலயம் வெள்ளிமலை ஏலக்காய் தோட்டம் தேயிலை தோட்டம் நிறைந்து காணப்படுகிறது. சுருளி அருவி இரண்டு இடங்களில் விழுகிறது. வெள்ளிமலை 1250 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தேனியில் இருந்து மேகமலைக்கு 54 கிலோ மீட்டர் செல்லவேண்டும். மேகமலை வனப்பகுதியில் புகழ்பெற்ற கண்ணகி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆனது தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ளது.
போடியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குரங்கணி பகுதியில் சிறந்த சுற்றுலா பகுதியாக காணப்படுகிறது. இங்குள்ள சுருளி அருவி சுமார் 150 அடி உயரத்தில
இருந்து விழுகிறது. அருவி விழுந்த இடத்திலிருந்து வெகு தூரம் ஆறு போன்று காட்சியளிக்கும்.
கும்பக்கரை அருவி
பெரிய பாறைகள் இடையே இருந்து வரும் அருவியாகும். கண்கவர் நீர்வீழ்ச்சி பார்ப்போரை பரவசமடையச் செய்யும். இந்தப் பகுதியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடி மெட்டு
போடியில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த போடி மெட்டு. 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
கௌமாரி அம்மன் கோவில்
தேனியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இதன் மேற்பகுதிக்கு செல்பவர்கள் இந்த அம்மனை வழிபட்டு சொல்வது வழக்கம்.