வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாகவும், ஆசையாகவும் இருக்கிறது. செலவு செய்ய முடியாத நிலையால் பல பேரின் கனவு நனவாகவே போய்விடுகிறது. அந்த வகையில் அவர்களின் ஆதங்கத்தை தீர்க்க ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவில் உள்ள இடங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஆலப்புழா நீரில் படகு சவாரி செய்வது அற்புதமான அனுபவமாகும். இது ஐரோப்பாவின் வெனிசைப் போல இருப்பதோடு அதைவிட அழகாகவும் இருக்கும்.
'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கஜ்ஜியார் பனி மூடிய புல்வெளிகளையும் மரங்களையும் கொண்டு, ஸ்விட்சர்லாந்தை நினைவுப் படுத்துகிறது.
கொல்கத்தாவில் உள்ள லேக் டவுன் கடிகார கோபுரத்தை பார்க்கும் போது லண்டனில் உள்ள பிக் பென்னைப் போன்ற ஒரு நம்ப முடியாத பிரதியை காணலாம்.
தமிழ்நாட்டின் கொல்லி மலைகள் காட்டில் உள்ள ஹேர்பின் பெண்டுகள் வழியாக செல்லும் சாலைகள் ருமேனியாவின் டிரான்சில்வேனியாவின் அற்புதமான காடுகளை ஒத்திருக்கிறது.
பாரிஸில் உள்ள ஆர்க் டி ட்ரையம், கட்டிடமும் இந்தியா கேட் கட்டிடமும் கட்டமைப்பில் ஒற்றுமையை கொண்டுள்ளன.
காஷ்மீரில் உள்ள குல்மார்க் பனிச்சறுக்கு இடம் அமெரிக்காவின் ஆல்ப்ஸ் மலை தொடரில் பனிச்சறுக்கும் இடத்தை ஒத்து இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றன.
ஆம்ஸ்டர்டாம் துலிப் தோட்டங்களில் அழகான துலிப் பூக்களின் வரிசைகளை காஷ்மீரிலும் உள்ள தோட்டங்களிலும் ரம்யமாக கண்டு ரசிக்கலாம்.
கூர்க்கில் உள்ள வளைந்து செல்லும் நீரோடைகள், மூடுபனி நிறைந்த காற்று மற்றும் மலைகள் நிறைந்த சிறந்த இடங்கள் இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
புத்த மதங்களால் மெக்லியோட் கஞ்ச் மினி திபெத் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மடங்கள் திபெத் கட்டிட பாணியை ஒத்து காணப்படுகிறது. மேலே கூறிய இடங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்தளித்து மனதை மகிழ்வாக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.