
Peacock parenting முறையில் பெற்றோர்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளில் தங்கள் முக்கியத்துவமும் அதிகமாகத் தெரியும்படி நடந்து கொ.ள்வார்கள். இந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வெற்றிகளும் திறமைகளும் தங்களால்தான் என்பது போன்றும், தங்கள் மூலமாகத்தான் பிள்ளைகளின் சாதனைகள் சாத்தியம் ஆயிற்று என்ற ஈகோவையும் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பின் வெற்றி, விளையாட்டு வெற்றிகள் மற்றும் கலைத்திறன் வெற்றிகள் மூலம் தங்களின் தனித்தன்மமை வெளிப்படுவதாக நினைப்பார்கள்.
இவர்கள் எப்போதும் அடுத்தவர்களின் பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டுக் கொண்டு ஒரு எதிரி மனப்பான்மையோடே இருப்பார்கள். இது ஆரோக்கியமான போட்டியல்ல.
இந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எல்லைகளை மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கென்று எந்த சுதந்திரமும் தராமல், அவர்களை எப்போதும் தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க நினைப்பார்கள்.
இந்த வகைப் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு அழுத்தம் அதிகம் கொடுப்பதால் பிள்ளைகளுக்கு சோர்வு, பதற்றம் ஏற்படுவதுடன் அவர்களின் மனதில் தங்களைக் குறித்த சுயமதிப்பு குறைபாடு ஏற்படும்.
இவர்களால் தங்கள் பிள்ளைகளின் கஷ்டங்களையும் அவர்களின் மன உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாது. புரிந்து கொள்ளவும் அவர்கள் மறுப்பார்கள்.
இது போன்ற Peacock parenting முறையில் வளர்க்கப்படும் பிள்ளைகளின் மனதில் அவர்களைக் குறித்த சுய மதிப்பீடு குறைவாகவும், மனதில் குழப்பம் மற்றும் அவர்களின் தேவைகள் கவனிக்கப்படாமல் இருக்கும் நிலைமை ஏற்படும்.
இந்த வகை பெற்றோர்கள் தாங்கள் செய்யும் தவறுக்காக வருந்த மாட்டார்கள். மாறாக, தங்கள் குழந்தைகளை வருத்தி அந்தப் பழியை அவர்கள் மேலேயே போடுவார்கள்.