சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் - பயலி தீவின் ரகசியங்கள்!

பயணம்
payanam articles
The secrets of Payali Island!
Published on

த்திய பிரதேசம் இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படுவது போலவே கலாச்சார மையமான ஜபல்பூர் மத்திய பிரதேசத்தின் இதயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் அதன் அழகான அமைப்பிற்காக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. இயற்கையின் ரம்மியமான காட்சியைக் காண வெளிநாடுகளில் இருந்து மக்கள் இந்த நகருக்கு வருகிறார்கள்.

இங்குள்ள அழகுக்கு மத்தியில்  ஜபல்பூரில் ஒரு தீவு உள்ளது. இது பயலி என்று அழைக்கப்படுகிறது. நர்மதா ஆற்றின் மீது உள்ள இது இளைஞர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. தீவு இயற்கையின் அற்புதமான காட்சியை பிரதிபலிக்கிறது.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட இந்த இடம் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த குட்டி பயலி தீவை அடைவதற்கான வழி மிகவும் எளிதானது. ஜபல்பூர் ரயில் நிலையத்திலிருந்து சதர் பாண்டினாகா சாலை வழியாக கோர பஜாரில் இருந்து நேராக சென்று பார்கி அணையை அடையலாம். பார்கி அணையிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் பயலியை காணலாம். நண்பர் களுடன் முகாமிட விரும்பினால் நீங்கள் மத்திய பிரதேச சுற்றுலாத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

இத்துடன் இங்கு படகு சவாரி செய்யலாம். கேம்பிங் போடலாம் ஆனால் ஒரே சிக்கல் என்னவென்றால், இங்கு உணவு கடைகள் எதுவும் இருக்காது. வரும்போது உங்களுக்கான உணவுகளை நீங்களே எடுத்து வர வேண்டும். குடிநீரும் கூட. அதோடு நர்மதா  கடற்கரையில் உள்ள இந்த பயலி தீவின் நீர் மிகவும் ஆழமானது. எனவே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இங்கு வந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கொடைக்கானலின் மறைந்திருக்கும் சொர்க்கம்: பூம்பாறை!
payanam articles

ஆனால் இந்த இடம் உங்களை வெளியுலகத்தை மறந்து இயற்கையில் லயித்து போக வைக்கும். பொதுவாக கோவாதான் போக வேண்டும் என்று இளைஞர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த தீவும் இங்குள்ள அனுபவமும் கோவாவை விட புதுமையான அனுபவத்தை கொடுக்கும் நண்பர்களுடன் நேரம் கழிக்க சரியான இடமாக இருக்கும்.

-ஆர். ஜெயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com