சுற்றுலா என்பது தொடரும் வேலைகளுக்கு இடையில் சிறிய இடைவெளி எடுத்து வெளியூர்களுக்கு சென்று உடலையும் மனதையும் ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டு வருவது என்ற நிலை மாறி, தற்போது சுற்றுலா என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. உலக சுற்றுலா (UN Tourism) அமைப்பின் அளவுகோல் படி 2024 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் மக்கள் உலகளாவிய பயணம் மேற்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதில் அதிகளவு மக்கள் சென்று வந்த 8 இடங்கள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
இதன் பக்கத்து ஊர்களை விட அளவில் வாட்டிகன் சிட்டி மிகவும் சிறியது. யூரோப்பில் உள்ளது. 882 குடும்பங்களே வசித்து வரும் இந்த சிறிய அளவிலான சிட்டிக்கு வருடம்தோறும் 6.8 மில்லியன் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள் என்பது நம்ப முடியாத உண்மை. புனித யாத்திரை மேற்கொள்பவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் சாதாரண சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள கண் காட்சி அரங்குகள், மைகேல் ஆஞ்சலோவின் சிஸ்டைன் சாப்பலின் மேற்கூரை மற்றும் பிரமாண்டமான செயின்ட் பீட்டரின் பசிலிக்கா ஆகியவற்றைப் பார்வையிட நீண்ட வரிசையில் காத்திருப்பது தினமும் காணக்கூடிய காட்சி.
ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கிடையே இயற்கையில் அமைந்த எல்லைக்கோடு போன்ற மலையுச்சியில் பைரனீஸ் (Pyrenees) என்ற இடத்தில் அமைந்துள்ளது அன்டோரா. ஊசி முனையால் குத்துவது போன்ற குளிர் காற்று, ஆங்காங்கே சரிவுகளில் உறைந்து தொங்கும் ஐஸ் கட்டிகள் நிறைந்த சூழலில் அமைந்துள்ள ஒரு சீரற்ற கரடு முரடான சிகரங்களாலான இடம் அன்டோரா. இதன் மொத்த ஜனத்தொகை 81,938. இங்கு வந்து போகும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 9.6 மில்லியன். இங்குள்ள ரிசார்ட்களில் தங்கவும், வரி கட்டத் தேவையின்றி ஷாப்பிங் செய்யவும் மக்கள் இங்கு கூடுகின்றனர்.
தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய மாநிலம். முற்றிலும் இத்தாலி நாட்டால் சூழப்பட்டது. டவர்களால் சூழப்பட்ட மலையின் உச்சியில் உள்ளது. 33,581 மக்களே வாழ்ந்து வரும் இந்த இடத்திற்கு வருடந்தோறும் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தெருக்களில் உள்ள சிறு கடைகளில் ஷாப்பிங் செய்யவும், அருங்காட்சியகங்களைப் பார்வையிடவும் பயணிகள் இங்கு கூடுகின்றனர்.
கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவில் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகம். விடுமுறை, விழாக்காலம் போன்ற நேரங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழியும். 4,01,000 ஜனத்தொகையுள்ள இந் நாட்டிற்கு வருடந்தோறும் 11 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து போகின்றனர். ஓசை எழுப்பும் கடல் நீர், அழகான பீச் மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் கலாச்சாரத் திருவிழாக்கள் போன்றவை கூட்டம் கூடுவதற்கு காரணம் எனலாம்.
வட அமெரிக்காவின் கிழக்கு கரீபியன் கடலில் உள்ள இரட்டைத் தீவுகள் இவை. இரண்டும் தனித்துவமான குணம் கொண்டவை. எரிமலைத் திட்டுகள் ஓரம் அமைந்துள்ளது செயின்ட் கிட்ஸ். கருப்பு நிற மணற் பாங்கான பீச் உடையது. நெவிஸ், தனிமையான மலை உச்சியில் பசுமை போர்த்திய சூழலில் அமைந்துள்ளது. இரண்டிலும் சேர்த்து 46,843 மக்கள் வாழ்கின்றனர். வருடந்தோறும் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8,75,000.
கரீபியன் கடலில் உள்ள சுதந்திரமான தீவுகள். பாறைகளால் பாதுகாக்கப்படும் பீச், வியாபார மார்க்கெட்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல கப்பல் துறைமுகம் உள்ள தீவுகள். இரண்டிலும் சேர்த்து 94,000 மக்கள் வாழ்கின்றனர். வருடந்தோறும் இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையோ 1.1 மில்லியன்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று இது. இந்நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியப் பழமையும் புதுமையும் கலந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. 1.6 மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்நாட்டிற்கு வருடந்தோறும் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை. 14.9 மில்லியன். வெது வெதுப்பான, சூரியக் கதிர்கள் வீசும் இந்நாட்டு குளிர் சீசனில், பனியிலிருந்து தப்பிக்க யூரோப், நார்த் அமெரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து பயணிகள் பஹ்ரைன் வந்து குவிவதுண்டு.
உலக கோடீஸ்வரர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் சிறியதொரு ஐரோப்பிய நாடு இது. இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. சூதாட்ட விடுதிகள் நிறைந்தது. சுற்றுலாப் படகுகள் நிரம்பி நிற்கும் துறைமுகம் இங்குள்ளது. ஃபார்முலா 1 கார் ரேஸ் இங்கு நடைபெறுவது வழக்கம். 38,956 மக்களே வாழும் இந்த ஊருக்கு வருடந்தோறும் 3,40,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையாலேயே இந்த ஊர் செழித்து வளர்கிறது எனலாம்.