இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோவில் மிகவும் புகழ் பெற்றது. நைனிடால் ஏரிக்கு அருகிலுள்ள நைனா குன்றின் மேல் அமைந்துள்ளது இக்கோவில். 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும் நைனா தேவி தனது இரு கண்களால் வரும் பக்தர்களை ஆசீர்வதிக்கிறாள். கருவறையில் தேவி கல் வடிவில் காட்சி தருகிறார். தேவியின் கண்களை மட்டுமே தரிசனத்தில் காண முடியும். கருவறையின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டு பளபளப்பாக காணப்படுகிறது.
கோவிலின் உள் விமானம் பிரமிடு வடிவத்தில் உள்ளது. கருவறைக்குள் மூன்று தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. இடது புறம் மாதா காளி தேவியும், வலது புறம் விநாயகரும், நடுவில் நைனா தேவியை குறிக்கும் இரண்டு நேத்திரங்களும் (கண்கள்) உள்ளன.
நைனா தேவியின் பிரதான சன்னிதியில் இரண்டு சிங்க சிலைகளும் உள்ளன. இங்கு நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள பெரிய அரச மரத்தில் பக்தர்கள் வேண்டுதலுக்காக மணிகளை கட்டுகின்றனர். சதி தேவியின் உடலை சிவபெருமான் சுமந்து செல்லும்போது உடலில் இருந்து கண்கள் விழுந்த இடம் இது எனவும் எனவே தேவி இங்கு கண் வடிவில் காட்சி தருவதாகவும் கூறப்படுகிறது.
கோவில் வரலாறு:
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நைனா தேவி கோவில் சிலை 1842 இல் ஒரு பக்தரால் நிறுவப்பட்டது. 1880ல் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுக்குப் பிறகு நைனா தேவி கோவில் முற்றிலும் அழிந்துவிட்டது. பிறகு உள்ளூர்வாசிகள் 1883ல் நைனா தேவி கோயிலை மீண்டும் கட்டினார்கள்.
நைனா தேவி கோவிலில் நந்தா(ஷ்ரவண) அஷ்டமி விழா 8 நாட்கள் நடைபெறும். இங்கு நவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நைனா தேவி கோவில் நைனிடால் நகரின் மையத்தில் நைனி ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. நைனிடால் பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே சென்று இக்கோவிலை அடையலாம். அருகில் உள்ள ரயில் நிலையம் கத்கோடம்.
இக்கோவிலுக்கு செல்ல சிறந்த நேரம் மார்ச் முதல் ஜூன் வரை செல்லலாம்.