பயணக் கட்டுரை - உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சீதளா தேவி கோவில்!

சீதளா தேவி கோவில்
சீதளா தேவி கோவில்
Published on

த்தரகண்ட் மாநிலத்தில் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹல்த்வானியில் (Haldwani City) அமைந்துள்ள புகழ்பெற்ற அழகிய சீதளா தேவி கோவிலாகும். இந்தக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 1875 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுற்றிலும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள்   நிறைந்த மிக அழகான பகுதி இது.

சீதளா தேவி பெரியம்மை, சின்னம்மை போன்ற வெப்ப நோய்களைப் போக்கி ஆரோக்கியம் அருளக் கூடியவள்.

இக்கோவில் 11 ஆம் நூற்றாண்டில் கத்யூரி வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. பாரம்பரிய மற்றும் நவீன பாணிகளில் கட்டப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலை கொண்ட இந்த கோவில் மரம் மற்றும் கல்லால் ஆனது.

கோவிலுக்கு பின்புறம் சந்த் மன்னர்கள் காலத்தில் ஹாட் சந்தை இருந்ததாகவும், மக்கள் வெகுதூரம் பொருட்களை வாங்க வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகில் பதர்காரி கோட்டை இருந்ததாகவும் அது கோர்கா மன்னரால் போரின்போது இடிக்கப்பட்டது. இன்றும் இங்கு இடிக்கப்பட்ட சுவர்கள் முதலியவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. கோவிலின் பிரதான சந்ததியில் ஆதிசங்கரால் நிறுவப்பட்ட சீதளா தேவியின் சிலை உள்ளது இங்கு சிவபெருமானுக்கும் சிறிய அழகான சந்நிதி உள்ளது.

இதையும் படியுங்கள்:
அட, அதெல்லாம் மறந்தே போச்சுங்க! எதெல்லாம்?
சீதளா தேவி கோவில்

சுற்றிலும் மலைகள் மற்றும் காடுகளும் என இயற்கை எழில் கொஞ்சும் இடம். இது மலை ஏறுபவர்கள் மற்றும் இயற்கையை ரசிக்கும் மக்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். அருகிலுள்ள பார்க்க வேண்டிய இடங்கள் கெம்ப்டி நீர்வீழ்ச்சி, முசோரி, யமுனோத்ரி, டேராடூன் ஆகியவை.

அருகிலுள்ள ரயில் நிலையம் கத்கோடம். கத்கோடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் பந்த்நகர். இங்கு செல்ல சிறந்த நேரம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை. நைனிடாலிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த கோவில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com