எட்டாக்கனி, ரேஞ்சே தனி! 'மஹாராஜா' போல பயணிக்கலாம்... டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

மகாராஜா எக்ஸ்பிரஸ்
மகாராஜா எக்ஸ்பிரஸ்
Published on

குறிப்பு: ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் பயணிப்பதால் அதை ஏழைகளின் விமானம் என்று தாராளமாக அழைக்கலாம். இந்திய ரயில்வேயில் சாதாரண இருக்கைகள் முதல் சொகுசு ஏசி ஸ்லீப்பர் பெட்டிகள் வரை உள்ளன. ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கனவில் கூட நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு பயணத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் வசூலிக்கும் அரண்மனை ரயில் இந்தியாவில் உள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகத்தால் (IRCTC) இயக்கப்படும் மகாராஜா எக்ஸ்பிரஸ் 2010 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது. இந்த ரயில் தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான ரயிலாக உள்ளது . 23 பெட்டிகள் கொண்டதோடு டீலக்ஸ் கேபின்கள், ஜூனியர் சூட் கேபின்கள், சூட்கள், மற்றும் பிரசிடென்சியல் சூட்கள் என்ற நான்கு வகையான தங்குமிடங்களையும் வழங்குகின்றன. இந்த ரயிலில் ஒரு பயணத்திற்கு அதிகபட்சமாக 21 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறு.

செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து ஏப்ரல் ஆரம்பம் வரை இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் ஒப்பிட முடியாத ஆடம்பர வசதிகளை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு பயணத்திற்கு அதிகபட்சம் 88 பயணிகளை மட்டுமே தங்க அனுமதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
கோவாவில் சுற்றி பார்க்க வேண்டிய 10 அற்புதமான இடங்கள்!
மகாராஜா எக்ஸ்பிரஸ்

தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட உட்புறங்களுடன், மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆடம்பரத்தின் சின்னமாகவும், அரண்மனை போல தோற்றமளிக்கும் விதமாகவும் உள்ளது. மேலும், நாற்காலிகள், படுக்கைகள் மற்றும் பிற பர்னிச்சர்கள் முதல் உணவு மற்றும் பானங்கள் வரை அனைத்தும் ஒரு ராஜாவுக்கு அளிக்கப்படுவது போல ஆடம்பரமாக உள்ளன.

நவீன தொலைக்காட்சிகள், இணைய சேவைகள், மின்னணு லாக்கர், சர்வதேச அழைப்பு வசதி, ஏர் கண்டிஷனிங், சிறந்த வசதிகளுடன் கூடிய பெரிய தனியார் குளியலறைகள் போன்ற உயர்நிலை வசதிகள் ஒவ்வொரு கேபினிலும், சூட்டிலும் உள்ளன.

மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸில் மயூர் மஹால் மற்றும் ரங் மஹால் என்ற இரண்டு Multi-Cuisine உணவகங்கள் உள்ளன. இவை இரண்டும் அனைத்து நாடுகளின் உணவுகளையும் 24 கேரட் தங்கம் முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் அரச உணவாக பயணிகளுக்கு பரிமாறப்படுகிறது .

மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா முழுவதும் நான்கு வழித்தடங்களில் இயங்குகிறது. எட்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் பயணத்தின் போது, ​​பிரபலமான கோட்டைகள் மற்றும் அரண்மனைகளுக்கு தனிப்பட்ட நுழைவு, தாஜ்மஹால், கஜுராஹோ கோயில், ரணதம்போர் மற்றும் வாரணாசி குளியல் தளங்கள் போன்ற உலக பாரம்பரிய தளங்களுக்கு தனித்துவமான சுற்றுப்பயணங்களை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பயணிகள் கவனத்திற்கு : டிராவல் பேக் மற்றும் பேக்கிங் டிப்ஸ்!
மகாராஜா எக்ஸ்பிரஸ்

மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸின் டிக்கெட் கட்டணங்கள் ஒருவர் தேர்ந்தெடுக்கும் பாதை மற்றும் தங்குமிட வகையைப் பொறுத்தது. டெல்லி-ஆக்ரா-ரந்தம்போர்-ஜெய்ப்பூர்-டெல்லி வழித்தடத்திற்கான இரட்டையர் தங்குமிட டீலக்ஸ் கேபினுக்கான கட்டணம் மட்டுமே 'மிகவும் குறைவானது', ஒரு நபருக்கு ரூ. 4,13,210, ஜூனியர் சூட் ரூ.4,39,400, சூட் ரூ.6,74,310 மற்றும் பிரசிடென்ஷியல் சூட் ரூ.11,44,980.

மறுபுறம், டெல்லி-ஜெய்ப்பூர்-ரந்தம்போர்-ஃபதேபூர் சிக்ரி-ஆக்ரா-கஜுராஹோ-வாரணாசி-டெல்லி வழித்தடம் மிகவும் விலை உயர்ந்தது. டீலக்ஸ் கேபினுக்கு ரூ.6,54,880, ஜூனியர் சூட்டுக்கு ரூ.8,39,930, வழக்கமான சூட்டுக்கு ரூ.12,24,410 மற்றும் பிரசிடென்ஷியல் சூட்டுக்கு ரூ.21,03,210 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

( குறிப்பு : மகாராஜா எக்ஸ்பிரஸில் கட்டணங்கள் தொடர்ந்து மாறக்கூடியவை என்பதால் சரியான கட்டணத்திற்கு இணையதளத்தை பார்வையிடவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com