

மேற்கு தொடர்ச்சி மலையின் மடிப்புகளுக்கு மத்தியில் அடர்ந்த பசுமையான தேயிலை தோட்டங்கள் காப்பி தோட்டங்கள் சூழப்பட்டு அமைதியான நீல நிற நீர் தேக்கத்துடன் காணப்படுகிறது வால்பாறை பகுதி. கோவையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் பொள்ளாச்சியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலும் வால்பாறை உள்ளது. குறைந்த பட்ஜெட்டில் செல்லக்கூடிய சிறந்த மலை வாசஸ்தலமாகும். இயற்கையான சூழ்நிலை எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான பகுதிகள் மாசுபடாத அமைதியான சூழ்நிலை என நம்மை அழைத்துச் செல்கிறது.
நீர்த்தேக்கம் மட்டுமல்ல இயற்கையான காட்சிகள் வனவிலங்கு சரணாலயம் போன்றவை நம்மை வரவேற்கிறது. வால்பாறை கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் 60 கிலோ மீட்டர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் இருபுறமும் கண்ணை கவரும் இயற்கை காட்சிகள் இவற்றுடன் 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட பாதைகள் என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களும் காப்பி தோட்டங்களும் நிறைந்து காணப்படுகிறது.
மேகங்கள் தாழ்வாக இறங்கி நம்மை தொட்டு செல்கிறது. அதுவே ஒரு புதிய உலகத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வால்பாறை பகுதியில் ஏகப்பட்ட சுற்றுலா இடங்களை காணலாம்.
ஆழியார் அணை
வால்பாறை அடிவாரத்தில் ஆழியார் அணை பறந்து விரிந்து காணப்படுகிறது. மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் இந்த நீர்த்தேக்கம் பறந்து விரிந்து காணப்படுகிறது.
இங்குள்ள பூங்காக்களில் விதவிதமான வண்ணப் பூக்களை காணலாம். சிறுவர்களுக்கு பொழுதுபோக்காக ஒரு அழகிய பூங்கா உள்ளது. நீர்நிலைகளில் படகு சவாரி செய்யலாம். குரங்கு இனங்கள் பல வகையான பறவைகளை இங்கு பார்த்து மகிழலாம்.
நல்ல முடி காட்சி முனை
அடர்ந்த தேயிலை தோட்டங்களின் நடுவில் அமைந்துள்ளது. முக்கியமான சுற்றுலா இடமாக உள்ளது. இங்கிருந்து மிக உயரமான ஆணை முடி சிகரத்தை இங்கிருந்து காணலாம். அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து மகிழலாம்.
சோலையார் அணை
ஆசியாவின் மிகப்பெரிய அணையாக இந்த அணை கருதப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் பறந்து விரிந்து காணப்படுகிறது. அணையின் மீது நடந்து செல்வது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். வனத்துறையுடன் அனுமதி பெற்று இந்த அணைக்கட்டு பகுதியை பார்வையிடலாம்.
சின்னக்கல்லார் அருவி
தென்னிந்தியாவில் அதிக மழை பெய்யக்கூடிய இடமாக இந்த இடம் உள்ளது. கம்பீரமான அருவி அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளது. இங்குள்ள தொங்கு பாலத்தில் நின்று கொண்டு அருவியின் அழகை ரசிக்கலாம். இந்தப் பகுதி முழுவதும் ஈரப்பதத்துடன் காணப்படும். எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஆனைமலை புலிகள் காப்பகம்
வால்பாறைக்கு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த காப்பகம் உள்ளது. வனவிலங்குகளுக்கு சொர்க்க பூமியாக இந்த இடம் அமைந்துள்ளது. சிங்கவால் குரங்கு புலி சிறுத்தை யானை காட்டெருமை மான் கரடி மற்றும் பறவை இனங்கள் நிறைய உள்ளன. வனத்துறை நடத்தும் சபாரி மூலம் இந்த இடத்தை சுற்றி பார்க்கலாம்.
கருமலை பாலாஜி கோவில்
அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள மிகப் பழமையான கோவிலாக உள்ளது. இந்தக் கோவில் கட்டிடக்கலைக்கு பேர் போனது.
ஆன்மீகவாதிகள் சுற்றுலாப் பயணிகள் இங்கு அமர்ந்து தியானம் செய்கின்றனர். மன அமைதிக்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளதால் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
தேயிலை மற்றும் காப்பி தோட்டம்
தேயிலை தோட்டங்கள் காப்பி தோட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது. இங்கு தேயிலை மற்றும் காப்பி தயாரிக்கும் முறையை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த இடத்தில் நமக்கு சுவையான சூடான காப்பி டீ கிடைக்கிறது. சில இடங்களில் தங்கும் வசதிகள் உள்ளன.
வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட்
இங்கு சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன. இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த இடத்திற்கு வருகின்றனர். இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்
பாலாஜி கோவில் காட்சி முனை
வால்பாறையில் கருமலை பாலாஜி கோவிலுக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் இருந்து வால்பாறையின் அழகு மலைகள் நீர்வீழ்ச்சிகள் இவற்றின் அழகை கண்டு ரசிக்கலாம். வால்பாறையில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன.
பட்ஜெட் விடுதியில் ஆரம்பித்து சொகுசு விடுதிகள் வரை நிறைய உள்ளன. தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் உள்ள பங்களாக்களில் தங்குவது தனி அனுபவமாக இருக்கும்
அக்கா மலை புல்வெளி
இங்குள்ள அக்கா மலை புல்வெளி சுவிட்சர்லாந்துக்கு இணையாக கருதப்படுகிறது. கருமலை ரோட்டில் இருந்து அக்கா மலை புல்வெளிகளை ரசிக்கலாம். மிகவும் குளிர்ச்சியான பகுதி. மனதிற்கு உற்சாகத்தையும் நிம்மதியையும் தரும் இடமாக உள்ளது.
வெள்ள மலை குகைப் பகுதி
கருமலையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து நாலு கிலோ மீட்டர் நீளம் மலையை குடைந்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
கூழாங்கல் ஆறு
கீழாறு அணையில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தப் பகுதி. இருபுறமும் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது.
இங்குள்ள ஆறுகளில் குளிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். இங்கு பல வண்ண நிறங்களில் கூழாங்கற்கள் நிறைந்த காணப்படுகிறது. எனவே இந்த நீர் சுத்தமான நீராக இருக்கும். குறைந்த பட்ஜெட்டில் மனதிற்கு நிறைவான இந்த பகுதிகளை சுற்றி பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும்.