
வந்தே பாரத் ரயில்கள் வழக்கமான ரயில்களைவிட வேகம், வடிவமைப்பு மற்றும் பயண வசதி ஆகியவற்றில் சற்று வித்தியாசமாகவும் , ஆடம்பர வசதியுடனும் இருக்கின்றன. இந்த ரயிலில் முன்பதிவு செய்ய விரும்பினால் CC (சேர் கார்) மற்றும் EC( எக்ஸிக்யூட்டிவ் சேர் கார்) ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதில் பயணிகள் குழப்பமடையாமல் பயணம் செய்வதற்காக EC,CC இருக்கை வசதிகள் குறித்து இப்பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
வழக்கமான இருக்கை வசதியான CC இருக்கையில் 3×2 இருக்கை அமைப்பில் இருப்பதால் அதிகப் பயணிகளை குறைவான இடத்தில் அமரவைக்க முடியும் என்பதோடு இது குறுகிய தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. பெரிய இருக்கை வசதிகளை கொண்ட EC இருக்கைகள் அதிக இடம் சாய்வு இருக்கைகள் சுழலும் இருக்கைகளுடன் 2×2 என்ற அமைப்பில் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கின்றன.
விலை குறைவாக உள்ள CC டிக்கெட்டின் விலையுடன் ஒப்பிடும்போது EC டிக்கெட்டுகளின் விலை கூடுதல் வசதிகள், பிரீமியம் இருக்கைகள், மற்றும் சிறந்த உணவு போன்ற அம்சங்களின் காரணமாக 50 முதல் 60 சதவிகிதம் அதிகமாக இருக்கின்றன.
AC, சார்ஜிங் போர்ட்கள், இன்ஃபோடெயின்மென்ட் திரைகள் ஆகியவை இந்த இரண்டு இருக்கைகளிலும் உள்ளன. சற்று பரபரப்பாக இருக்கும் CC வகுப்பில் அதிக இருக்கைகள் உள்ள நிலையில், EC வகுப்புகளில் சுழலும் இருக்கைகள், சிறந்த உணவு ஆப்ஷன்கள், கேபின்கள் உள்ளதோடு, தனிப்பட்ட இடம் மற்றும் அமைதியான பயணத்தை வழங்குகிறது.
இந்த வந்தே பரத் ரயிலில் பயணிக்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய IRCTC வலைத்தளம், செயலி மற்றும் ரயில்வே கவுண்டர்களைப் பயன்படுத்தலாம்.
வந்தே பாரத் ரயில் பயணத்தில் CC வகுப்பு இருக்கையில் தேநீர், காபி, முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், அசைவ உணவுகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதேபோல் ECல் வரவேற்பு பானங்கள், சூடான சிற்றுண்டிகள், புதிய பழங்கள் மற்றும் பிரதான உணவுகளில் அதிக வகைகள் உள்ளதோடு ,சில பிரீமியம் வழித்தடங்களில், EC பயணிகளுக்கும் பலவகையான உணவு கிடைக்கும்.
அடிப்படை வசதிகளுடன் குறைந்த செலவில் குறுகிய தூரத்திற்கு ஏற்ற பயணமாக CC வகுப்புகள் இருக்கின்றன. ப்ரீமியம் வசதிகளுடன் அதிக இடம் மற்றும் செலவுகளும் சற்று அதிகமாக இருக்கும் பயணமாக EC வகுப்புகள் இருக்கின்றன. இதை மனதில் கொண்டு உங்களுக்கு ஏற்ற இருக்கை வசதிகளை தேர்வு செய்து பயணங்களையும் வசதிகளையும் விரைவாக மாற்றியுள்ள வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யலாம்.