

வாழ்க்கை என்பது நாணயம் மாதிாி, அதற்கு இரண்டு பக்கம் உண்டு. அதேபோல நமது வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப்பிடிப்பதே, நோ்மைதான். அந்த நோ்மையானது மனித வாழ்வில் முக்கிய அங்கம் வகித்தாலும் அதில் சங்கடங்களும் உருவாகிறது. அதற்காக நோ்மையை கடைபிடிக்காமல் இருக்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் நெறிமுறை.
பொதுவாகவே நோ்மையைக் கடைபிடிக்கும் நபருக்கு எதிாிகள் அதிகமாகிறாா்கள். அதுபோலவே துரோகிகளும் அதிகம்தான்.
இந்நிலையில் நோ்மையானவர்கள் மீது தொடுக்கப்படும் விமர்சனங்களுக்கும் குறைவேதுமில்லை. யாா் எப்படி இருந்தாலும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிாிகளால் தொல்லை வருவதுபோல இருக்கும், அதை விரக்தியின் உச்சம் தொட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் களின் எண்ண ஓட்டமானது கடவுள்மீது கோபத்தைஉருவாக்கும்.
கடவுளுக்கு என்மீது என்ன கோபமோ தொியவில்லையே, இனிமேல் கடவுளையே வழிபடமாட்டேன் என விரக்தி மனநிலையில் சிலர் இருப்பதும் உண்டே!
அதுசமயம்தான் நமது மனதையும் எண்ண ஓட்டத்தையும் நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
கடவுளுக்கு நம்மீது எந்த கோபமும் கிடையாது. அது கடவுள் நமக்கு வைக்கும் பரிட்சையாகும். நம்மை மேலும் புடம்போட்ட தங்கமாக மாற்ற அவரால் கொடுக்கப்படும் வலிமைமிகு பயிற்சியாகும்.
அதுதான் உண்மையும் கூட, ஆக நாம் நோ்மை தவறாமல் இருக்க, இறைவன் நடத்தும் பரிட்சையை நமக்கே உாித்தான நிதானத்துடன் எதிா்கொள்ளவேண்டும்.
புராணத்தில் ஹரிசந்திரன் கதையை நாம் படித்து தொிந்து கொள்ளவில்லையா, எத்தனையோ இழப்புகளை சந்தித்தும் அவன் கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல் நின்றானே, அது போலவே நேர்மை என்பது இறைவன் நமக்கு அளித்த கொடை, அதை கடைபிடிக்கும்போது எத்தனை இடையூறுகள், எதிா்மறை விமா்சனங்கள் தேவையில்லாத பிரச்னைகள் வந்தாலும், நாம் அதை ஒருபோதும் புறந்தள்ளிவிடக்கூடாது.
நமது நோ்மை குணம் கண்டு விஷமிகள் நம்மைவிட்டு விலகலாம், அதற்காக நாம் வருத்தப்படக்கூடாது அதேநேரம் அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவும் கூடாது.
பொதுவாகவே நோ்மைஎளிதானது அதை வலிமையாக்குவது நம்கையில் உள்ளது.
எளிதாக கிடைக்கும் நோ்மையை சிலர் புறந்தள்ளி விடுவாா்கள், அது அவர்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்லும் ஆழமான வெளியூா் குளமாகும். அதில்தான் ஆழம் எங்கு உள்ளது என்பது நமக்குத் தொியாது.
ஆக, பொருளை அவசர தேவைக்கு அடகு வைப்பதுபோல சந்தர்ப்ப சூழ்நிலைக்காக நோ்மையை ஒருபோதும் எந்த தருணத்திலும் அடகு வைத்துவிடாதீா்கள். அடகு வைப்பது சுலபம், அதை மீட்பதுஎன்பது மிகவும் சிரமம்,என்பதை உணருங்கள். நோ்மைக்கு சோதனை வரும்போதெல்லாம் நமது நிதானத்தால் அதை வென்று காட்டுங்கள் இறுதி வெற்றி நம்முடையதே!