தென் கைலாசமான வெள்ளயங்கிரி மலையினை பற்றி ஒரு பார்வை!

வெள்ளயங்கிரி மலை
வெள்ளயங்கிரி மலை
Published on

கோயம்பத்தூரிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, வெள்ளயங்கிரி மலைத்தொடர். இந்த மலை மேற்குமலை தொடர்ச்சியில் அமைந்துள்ளது 6000அடி உயரத்தைக் கொண்டது.

இந்த மலையை “தென்கைலாயம்” என்றும் அழைப்பார்கள். மலை அடிவாரத்தில் வெள்ளயங்கிரி ஆண்டவர் மற்றும் மனோன்மணி அம்மனின் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை அமைந்திருப்பது பூண்டி என்னும் கிராமத்தில்.

வெள்ளயங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன்
வெள்ளயங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன்

மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலை வருடம் முழுவதும் தரிச்சிகலாம். ஆனால் மலை உச்சியில் இருக்கும் கோவிலை மார்ச்-மே வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் செல்ல அனுமதி கிடையாது.

பெண்களும் குழந்தைகளும் ஏற அனுமதி கிடையாது. மலை உச்சிக்கு போக முடியாதவர்கள் மலை அடிவாரத்திலேயே சிவனை தரிசிக்கலாம்.

இந்த மலையில் இரவில் ஏறுவதே சிறந்ததாக கருதப்படுகிறது. அப்போது தான் சூரிய கதிரினை தவிர்க்க முடியும். விடியற்காலையில் மலை உச்சியிலிருந்து சூரிய உதயத்தை பார்ப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். மலையடிவாரத்திலிருந்து உச்சியை அடையும் தூரம் 13 கி.மீட்டராகும்.

வெள்ளயங்கிரி ஆண்டவரை தரிசிக்க...
வெள்ளயங்கிரி ஆண்டவரை தரிசிக்க...

வெள்ளயங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஏழு மலைகளை கடக்க வேண்டும். இது சற்று கடினமான மலையேற்றமாக இருப்பதாலே ஆண்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

முதல் மலை:

து சற்று செங்குத்தான மலை. கற்களால் படிகள் அமைந்திருக்கிறது. ஆயிரம் படிகளுக்கு மேல் ஏறினால் மட்டுமே மலைஉச்சியை அடைய முடியும். மலை உச்சியை அடைவதற்குள் வேர்த்து விருவிருத்து விடும். மலையுச்சியில் வெள்ளை வினாயகர் கோவிலை காணலாம்.

இரண்டாவது மலை:

துவும் முதல் மலை போலவே இருந்தாலும், இங்கே நிறைய மூங்கில் மரங்களை காணலாம், சிறிய நீர் நிறுத்தத்தை காணலாம். இரண்டாவது மலைத்தொடர் உச்சியில் பாம்பாட்டி சித்தர் குகை அமைந்திருக்கிறது.

மூன்றாவது மலை:

மூன்றாவது மலை உச்சியை அடைந்தால், அங்கே கைக்காட்டி சுனை அமைந்துள்ளது. இந்த இடமே மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

நான்காவது மலை:

ந்த மலை உச்சியில் ஒட்டர் சித்தர் சமாதி அமைந்துள்ளது.

பீமன் களி உருண்டை
பீமன் களி உருண்டை

ஐந்தாவது மலை:

ந்தாவது மலையை “பீமன் களி உருண்டை” என்று அழைப்பார்கள். ஏனெனில் இங்கிருக்கும் கல் களியுருண்டை போல காட்சி தருவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த மலை தொடரோடு கற்களால் ஆன பாதை முடிவடைந்து விடும். இதற்கு பிறகு மண் பாதையிலேயே பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும்.

ஆறாவது மலை:

றாவது மலையை “திருநீறுமலை” என்று அழைப்பார்கள். ஏனெனில் இங்கிருக்கும் மண் திருநீறு போல வெள்ளையாக இருக்கும். சிலர் இந்த மண்ணை சிறிது தோண்டி வீட்டிற்கு எடுத்து செல்ல வைத்து கொள்கிறார்கள். இங்கே பல விதமான மூலிகைகள் இருப்பதை காற்றிலே வரும் நறுமணத்தை வைத்தே அறிந்து கொள்ளலாம். திருநீறுமலையின் முடிவில், பிரம்ம தீர்த்தம் ஆண்டி சுனை உள்ளது.

ஏழாவது மலை:

ழாவது மலை ஏறுவதற்கு செங்குத்தாகவேயிருக்கும். இங்கே இளைப்பாறுவதற்கு சுக்கு காப்பி மற்றும் முறுக்குகள் விற்கப்படுகிறது. இங்கே மூலிகைகளின் வாசம் சற்று அதிகமாகவே வீசும். இந்த மலையை ஏறுவது சற்று கடினமென்பதால் நேர விரயமாகும்.

ஏழாவது மலையின் உச்சியில் வெள்ளயங்கிரி நாதரை தரிச்ச செல்லும் பாதை சற்று குறுகலாகவேயிருக்கும். முதலில் விநாயகரின் தரிசனத்தை பெறலாம். பிறகு சற்று தூரத்தில் முருகப்பெருமான் சிறு குகையில் தரிசனம் வழங்குவார். அதையும் தாண்டி குறுகலான பாதையில் சென்றால் சிவபெருமானின் தரிசனத்தை பெறலாம்.

சிவப்பெருமானுக்கு மூன்று வேளையும் பூஜையும், அலங்காரமும் செய்யப்படுகிறது. சிவப்பெருமானை தரிசித்த பிறகு பூவும் விபூதியும் கொடுக்கப்படுகிறது.

மலை உச்சியில் இருந்து சூரிய உதயத்தை ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் இங்கே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சியையும் இங்கே காணலாம். மலையின் உச்சியிலிருந்து சிறுவாணி அணையையும் பார்த்து ரசிக்கலாம். மலை ஏறுவதை விட இறங்குவதி சற்று கடினமாகவேயிருக்கும்.

ஏழுமலைகளை ஏற வேண்டும்...
ஏழுமலைகளை ஏற வேண்டும்...www.maalaimalar.com

முதல் முறை பயணம் செய்பவர்களுக்கான அறிவுரை:

· ஏழுமலைகளை ஏற வேண்டும். அதற்கு ஏற்ற உடல் பலம் இருந்தால் ஆரம்பிக்கலாம்.

 · ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மூங்கில் குச்சி மிகவும் உதவிகரமாக இருக்கும். அதை வாங்கி வைத்து கொள்வது சிறந்தது.

 · மலை ஏற ஆரம்பிக்கும் போது செருப்புகளை அணிய வேண்டாம். ஏனெனில் மலையே புனிதமாக கருதப்படுவதால் செருப்புகளை தவிர்க்கவும்.

 · மலை ஏற தொடங்குவதற்கு முன்பு கொஞ்சமாக சாப்பிடவும். தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லவும்.

 · பிலாஸ்டிக்களை எடுத்து சென்று அங்கே போட்டு மலையை குப்பை ஆக்க வேண்டாம்.

 · பனி படர்ந்திருக்கும் போது எங்கேயும் சென்று சுற்றி பார்க்க வேண்டாம். பாதை மாறி தொலைந்து போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 · டார்ச் லைட்கள் எடுத்து செல்வது மிகவும் நல்லது.

 ·விலை சற்று அதிகமாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு சில தின்பண்டங்கள் மலையில் கிடைக்கும்.

இந்த மலை ஏற்றம், ஒருவரால் எவ்வளவு சகிப்புத் தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் இருக்க முடியும் என்ற பாடத்தை கற்று தரும்.

இதையும் படியுங்கள்:
அசத்தலான ருசியில் கர்நாடகா ஸ்பெஷல் உப்பு புளி தோசை!
வெள்ளயங்கிரி மலை

முதல் முறை பயணிப்பவர்களுக்கு 11 மணி நேரம் வரை மலை ஏறி இறங்க ஆகலாம். இதுவே அடிக்கடி பயணிப்பவர்கள் 6-7 மணி நேரத்திலேயே ஏறி இறங்கி விடுவார்கள்.

இந்த மலை ஏற்ற அனுபவம் ஒரு ஆன்மீக பயணமாக மட்டுமில்லாமல் விடாமுயற்சியுடன் துன்பங்களை எதிர்க்கொண்டு இலக்கை அடைவதை பற்றியும் கற்று தரும். கடினங்களை தாண்டி சிவபெருமானை தரிசித்துவிட்டு வருவது நல்ல அனுபவமாகவேயிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com