உலகப் பாரம்பரியத்தின் தலைநகரம்: இத்தாலி ஓர் ஆச்சரியங்களின் தேசம்!

World Heritage Capital
venice city
Published on

ரோப்பாவின் நான்காவது அதிக மக்கட்தொகையை கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் 93 சதவீதம் மக்கள் இத்தாலிய மொழியை பேசுபவர்கள்தான். வளமான மற்றும் மாறுபட்ட வரலாற்றை கொண்டுள்ள இத்தாலியில் குறைந்தது 850,000 ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தாலி என்பது தெற்கு ஐரோப்பாவிலிருந்து அட்ரியாடிக் கடல், டைர்ஹெனியன் கடல், மத்திய தரைக்கடல் கடல்வரை நீண்டு செல்லும் ஒரு பூட்ஸ் வடிவ தீபகற்பமாகும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆற்றலுக்கு சமமான வெயில் இத்தாலியில் மட்டுமே விழுகிறது என்கிறார்கள்.

உலகின் அதிக யுனெஸ்கோ தளங்களைக் கொண்ட நாடு இத்தாலி. உலக கலை பாரம்பரியத்தின் சின்னங்களில் சுமார் 70% இத்தாலியில் உள்ளது, மேலும் 4,000-க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன.

இத்தாலியின் வெனிஸ் நகரத்தை தண்ணீரில் மிதக்கும் நகரம் என்று கூறலாம். இங்குள்ள பல கட்டடங்கள் 1600 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரின் மேல் நிலைத்து நிற்கின்றன. இந்த கட்டடங்கள் தண்ணீருக்கு அடியில் மரக் கம்பங்களால் தாங்கி பிடிக்கப்படுகின்றன. மரம், மண், நீர் ஆகியவற்றின் காரணமாக இந்த கட்டடங்கள் இத்தனை ஆண்டுகளாக நிலைத்து நிற்க முடிந்திருக்கின்றன.

இத்தாலியின் வெனீஸ் நகரை "பாதசாரிகளின் நகரம்"என்பர். காரணம் இந்நகரில் சாலைகளில் வாகனங்கள் செல்லாது. இந்நகரில் 150 கால்வாய்களும், 117 தீவுகளும், 409 பாலங்களும் உள்ளன. நகரம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளதால் 485 கிமீ பரப்பளவு கொண்ட வெனீசில் குட்டிச் சந்துகளும், முட்டுச்சந்துகளும்தான் ஏராளம். இதனால் வெனீஸ் நகரில் எங்கு சென்றாலும் நடந்துதான் செல்லவேண்டும். ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல படகு போக்குவரத்து தான் உள்ளது. பாரம்பரியமான பழமையான கட்டிடங்களை பார்த்துக் கொண்டே நடப்பதுதான் இங்கு வாடிக்கை.

இத்தாலியர்கள் சாப்பிடும்போது உணவுடன் நீர் அருந்துவதில்லை! அதற்கு பதிலாக திராட்சை ரசத்தை மட்டுமே அருத்துவர். இத்தாலியர்கள் உணவு மீதான பிரியத்திற்கும் பெயர் பெற்றவர்கள்! அவர்கள் உலகிற்கு வழங்கியதுதான் பிரபலமான பீட்சா, பாஸ்தா, மார்கெரிட்டா போன்ற உணவுகள்.

இத்தாலியில் ஒருவரை பார்த்து "என்ன வேலை செய்கிறீர்கள்? என்று கேட்பது அநாகரீகமாக கருதப்படுகிறது. இத்தாலியில் கர்ப்பிணிகளை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை. இத்தாலி நாட்டில் அரசு விழாக்கள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் தேசிய கீதம் இசைத்தால் போதுமானது.

இத்தாலியர்கள் சங்கீதப் பிரியர்கள் எப்போதும் எதையாவது பாடியபடி முணுமுணுத்துக் கொண்டிருப்பர். கடையில் பொருட்களை விற்பவர்களும் பாடியபடி பொருட்களின் விபரங்களை கூறுவர்.

இதையும் படியுங்கள்:
ஏழைகளின் ஊட்டி: ஏற்காடு – அவசியம் காணவேண்டிய மலைவாசஸ்தலம்!
World Heritage Capital

இத்தாலியர்கள் வேட்டை ஆடுவதில் ஆர்வம் மிக்கவர்கள். வருடத்திற்கு சராசரியாக 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே பூகம்ப வரி விதத்த நாடு இத்தாலிதான் . அங்கு பூகம்பம் ஏற்பட்டபோது நாட்டு மக்கள் தங்களுடைய வருமானத்தில் 5 சதவீதம் பூகம்ப வரி செலுத்தவேண்டும் என்று சட்டம் அமலில் இருந்தது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் காபி தட்டுப்பாடு ஏற்பட்டது அந்த நேரத்தில் காபிக்கொட்டைக்கு பதிலாக பார்லியை வறுத்து அதைத்தான் காபிக்கு பதிலாக பயன்படுத்தினார்கள். அதையே தற்போதும் நடைமுறையில் வைத்துள்ளனர்.

இத்தாலியின் அடையாளங்களில் ஒன்று உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். உலகப் போர் சமயத்தில் பைசா கோபுரத்தின் நிலைமை கவலைக்குள்ளானது. அமெரிக்கா அந்த சமயத்தில், இத்தாலியில் இருக்கும் பெரும்பாலான கட்டடங்களைத் தகர்த்துத் தள்ள அதிலும் தப்பிப் பிழைத்து நின்றது இந்த சாய்ந்த கோபுரம் தான். தற்போது வருடத்திற்கு ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அதனை பார்க்க வருகிறார்கள்.

payanam article
paisa gopuram

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வருடந்தோறும் "தொங்கும் திருவிழா" நடைபெறும் . இந்த வித்தியாசமான கொண்டாட்டத்தில் இரு மலைகளுக்கும் நடுவே கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் தொட்டில் கட்டி நாள் முழுவதும் தொங்குவதுதான் இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம். உலகின் மிகவும் குளிரான கொண்டாட்டம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com