

ஏற்காடு மலை சேலத்தின் அருகே கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ஒரு மலைவாச தலமாகும். இது சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் சுமார் 5000 அடி அடி உயரத்தில் உள்ளது. பசுமையான மலைகள் காப்பி தோட்டங்கள் இதமான சூழ்நிலை என பிரமிக்க வைக்கிறது இது சிறந்த சுற்றுலா தலமாக செயல்பட்டு வருகிறது. இவன் பரப்பளவு 4382 சதுர கிலோமீட்டர். ஏழைகளின் ஊட்டி என பெயர் பெற்றுள்ளது.
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இங்கு கோடை விழாவின்போது மலர் கண்காட்சி நாய் கண்காட்சி படகு போட்டி ஆகியன சிறப்பாக நடைபெறும் இதை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். இங்குள்ள ஜப்பானிய பூங்கா பார்க்கவேண்டிய ஒரு இடமாகும். இங்கு பல வகையான தாவர கன்றுகள் விற்பனைக்கு கிடைக்கும் மணிப்பாறை என்ற இடத்தில் கல்லால் மோதினால் மணி சத்தம் கேட்கும். இதை பார்ப்பதற்கு வினோதமாக இருக்கும்.
ஏற்பாட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த இடத்தில் குளிப்பதற்கு சுகமாக இருக்கும். ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கிள்ளியூர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர். இங்குள்ள பாறைகள் அழகாக இயற்கையாக அமைந்துள்ளது. சேர்வராயன் கோவில் பெருமாள் குகை கோவில் சிறப்பாக உள்ளது.
இதை சுற்றி மான் பூங்கா பொழுதுபோக்கு பூங்கா அண்ணா பூங்கா மற்றும் படகு சவாரி உள்ளது. படகு சவாரி செய்ய காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்படும் எட்டு நபர்களுக்கு 320 நான்கு நபர்களுக்கு 110 ரூபாய் வசூல் செய்கிறார்கள். இதை ஒட்டி பக்கோடா காட்சி முனை உள்ளது. ஏற்காடு கிழக்கு முனையில் அமைந்துள்ளது பிரமிடு பாய்ண்ட். இந்த இடத்தில் ராமர் கோவில் உள்ளது. இங்கிருந்து அயோத்தியா பட்டணம் முழுவதையும் அருமையாக பார்க்கலாம். இவை ஏற்காட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஏற்காட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள பட்டுப் பண்ணை கண்ணை கவரும் விதத்தில் உள்ளது.
மல்பெரி செடிகள் அதிகம் காணப்படுகிறது. இந்தப் பூங்காவில் பல வண்ணங்களில் ரோஜா மலர்களை காணலாம். தமிழக கேரள எல்லைப் பகுதியில் இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். ஏற்காடு ஏரி சீமாட்டி இருக்கை பக்கோடா , டாப் சிகரம் காவேரி சிகரம் போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.
சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் ஏற்காடு உள்ளது. அக்காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இந்த இடங்களில் கோடை காலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். பார்க்க வேண்டிய இடங்கள் என எடுத்துக் கொண்டால் மரகதைஏரி லேடிஸ் சீட் பக்கோடா பாயிண்ட் சேர்வராயன் கோவில் நல்லூர் அருவி கிள்ளியூர் அருவி கரடி முனை காட்சி லலிதா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் முதலியவற்றையும் சுற்றி வரலாம்.
இங்கு கோடை விழாவின்போது மலர் கண்காட்சி நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி படகு பட்டி ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
இதனைக்காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கோடைகாலத்தில் இங்கு வருகை தருவார்கள். இங்கு தங்குவதற்கு ஏற்றபடி விடுதிகளும் உணவகங்களும் உள்ளன. ஊட்டிக்கு போனால் அதிக செலவாகும் ஆனால் ஏற்காடு போனால் செலவு கம்மியாகும்
எனவே இதனை ஏழைகளின் ஊட்டி என அழைக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்டுகளிக்க அற்புதமான இடமாக உள்ளது.