
வெளி நாடுகளில் இந்தியர்கள் சுற்றுலா செல்வது அதிகமாகி வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் வெளி நாடுகள் சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனாலேயே பல நாடுகளுக்கு விசா இல்லாமல் பாஸ்போர்ட் மட்டும் பயன்படுத்தி இந்தியர்கள் வரலாம் என்று அந்த நாடு அனுமதியளித்தது.
அங்கு நிரந்தரமாக சென்று தங்குபவர்களுக்கு இது செல்லாது. ஆனால் சுற்றுலா செல்பவர்களுக்கு இது மிக மிக நல்ல செய்தியாக அமைந்தது. அந்த வகையில் எந்தெந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பதைப் பார்ப்போம்.
நேபாளம்:
நேபாளம் இந்தியாவுக்கு மிக அருகே உள்ள நாடு. அதேபோல் சுற்றிப்பார்க்க வேண்டிய பல இடங்கள் அங்கு உள்ளன. இங்கு நீங்கள் செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதும்.
இந்தோனேஷியா மற்றும் பூட்டான்:
இந்தோனேஷியா, இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக உள்ளது. அதேபோல் இமயமலைக்கு அடியில் உள்ள பூட்டான் மிகச்சிறந்த சுற்றுலா தேசமாகும். இந்த இரண்டு நாடுகளுக்கும் இந்தியர்கள் செல்ல விசா தேவையில்லை.
செர்பியா:
ஐரோப்பாவில் இருக்கும் செர்பியாக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம். இங்கு ஒரு வருடத்தில் 30 நாட்கள் வரை சுற்றுலாவாசிகள் செல்லலாம். மேலும் பார்படாஸ், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல் ஆகிய நாடுகளுக்கும் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம்.
மேலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இன்னும் சில பெரிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு சுற்றுலா வர அனுமதி அளிக்க உள்ளது.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலா செல்கிறார்கள் என ஆய்வு கூறியது. இதனையடுத்து இலங்கை அரசு இன்னும் சுற்றுலாவாசிகளை அதிகரிக்க விசா தேவையில்லை என்று அறிவித்தது. மேலும் இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
பணமும் பாஸ்போர்ட்டும் இருந்தாலே போதும் இந்த நாடுகளுக்கு சென்று சுற்றிப்பார்க்க எந்த தொல்லைகளும் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் விசா இல்லாமல் செல்லலாம் என அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதன் அர்த்தத்தை அனுபவம் மூலம் தெரிந்துக்கொள்ளப்போவது என்னமோ உண்மைத்தான் போல!