என்னது! 1375 அடி ஆழத்தில அழகான ஹோட்டலா..?

beautiful hotel at a depth of 1375 feet.
trending hotels
Published on

பெரும்பாலான பயணிகள் பயணத்தை திட்டமிடும்போது ஹோட்டலுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் உலகிலேயே சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட ஆழமான ஹோட்டல் குறித்து இப்பதிவில் காண்போம்.

பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட வேல்ஸ் நாட்டில் உள்ள Snowdonia எனும் மலைப்பகுதியின் அடிவாரத்தில், 1810 முதல் செயல்பட்டு வந்த சுரங்கம்  1939 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. இந்த சுரங்கத்துக்குள், 1,375 அடி ஆழத்தில் Deep Sleep எனும் பெயரில் ஓட்டல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இதுவே உலகின் ஆழமான ஓட்டல் என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த ஓட்டலை அடைவது அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. சுரங்கத்துக்குள், பழைய படிக்கட்டுகள், பாலங்கள் வழியாக மிகவும் த்ரில்லிங்கான ஒரு ட்ரெக்கிங் பயணத்தை கடந்து தான் இந்த ஓட்டலை அடைய முடியும். ஒரு மணிநேர ட்ரெக்கிங்கின்போது, ஒரு வழிகாட்டி நம்மிடம், சுற்றுச்சூழல் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்களை வழங்குவார்.

இந்த Deep Sleep ஓட்டல், வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே செயல்படுகிறது. அதாவது சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நாம் இங்கு தங்கலாம். இங்கு நான்கு காட்டேஜ் ரூம்களும், ஒரு ஹனிமூன் சூட் ரூமும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோவாவில் சுற்றி பார்க்க வேண்டிய 10 அற்புதமான இடங்கள்!
beautiful hotel at a depth of 1375 feet.

ஒவ்வொரு ரூமிலும் இரண்டு பேர் தங்க முடியும். 14 வயதுக்கு மேற்பட்ட நல்ல உடல்நிலை கொண்ட யார் வேண்டுமானாலும் இங்கு  தங்க அனுமதி இருக்கிறது. காட்டேஜ் ரூம்களுக்கு ஒரு இரவுக்கு சுமார் 36,000ரூபாயும், ஹனிமூன் சூட் ரூமுக்கு ஒரு இரவுக்கு சுமார் 56,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ரூம்களை புக் செய்த பின்னர், சனிக்கிழமை 5 மணியளவில் மலையடிவாரத்து முகாமுக்கு வந்துசேர வேண்டும். அங்கு லைட் பொருத்தப்பட்ட ஹெல்மெட், பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

அவற்றை மாட்டிக்கொண்டு, வழிகாட்டியுடன் வெளி உலகிற்கு குட்பை சொல்லிவிட்டு பாதாளத்துக்குள் பயணிக்கத்தொடங்கிவிட வேண்டியதுதான். பழைய சுரங்கத்தினுள் 1,375 அடி ஆழத்துக்கு, ஒரு மணிநேர கடினமான மலை இறக்க அனுபவத்துக்கு பின்னர், தங்குமிடத்தை அடயலாம். அங்கே  வெல்கம் டிரிங்ஸ், இரவு உணவு வழங்கப்படும்.

ஹோட்டலில் உள்ள அறைகள் பாறைகளால் செதுக்கப்பட்டு நவீன வசதிகளுடன் அமைதியாக விருந்தினர்களுக்கு மாறுபட்ட உலகத்தைப் போன்ற அனுபவத்தையும் வழங்குகின்றன. இந்த ஹோட்டலில் டாய்லெட் வசதி, மின்சாரம், வெப்பமாக்கல் மற்றும் வை பை, போன்ற அனைத்து நவீன வசதிகள் இருப்பதோடு முற்றிலும் இயற்கையான மற்றும் அமைதியான சூழலைப் பராமரிக்கிறது.

அறைக்கு சென்று தூங்கி பின்னர் மறுநாள் காலை எழுந்ததும், டீ,காபி போன்ற பானங்களும், காலை உணவும் வழங்கப்படும். மீண்டும் நம் வழிகாட்டியுடன் 1375 அடி உயர பயணித்து பேஸ் கேம்பை அடையலாம். இங்கே சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படும். இங்கு ரூம் புக் செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம். ரூம்களின் இருப்பு நிலையை வலைத்தளத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியில் ஆழ்த்தும் 6 ஆஃப் பீட் கடற்கரைகள்!
beautiful hotel at a depth of 1375 feet.

நம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கிரில் அனுபவத்தை இந்த டீப் ஸ்லீப் பாதாள ஹோட்டல் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com