
இந்தியாவில் உள்ள அழகான இயற்கை சார்ந்த இடங்களில் கடற்கரைகள் முதலிடத்தில் இருக்கின்றன சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முதன்மை வகிக்கும் கடற்கரைகளை விடுமுறை தினங்களில் மன அமைதியோடு ரசிப்பதில் சிறிது நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த இந்தியாவில் உள்ள மறைக்கப்பட்ட சுற்றுலா ரத்தினங்கள் வெகுஜன சுற்றுலா பயணிகளால் அதிகம் செல்லப்படாத கடற்கரை இடங்கள் அமைதி அழகான நிலப்பரப்புகள் மற்றும் பரபரப்பான கூட்டத்திலிருந்து தப்பிக்கும் ஆஃப் பீட் கடற்கரைகள் பற்றிய பதிவுதான் இந்த கட்டுரை.
1.யாரடா கடற்கரை
விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள யாரடா கடற்கரை மூன்று பக்கங்களில் மலைகளாலும் மறுபக்கம் வங்காள விரிகுடா கடலாலும் சூழப்பட்டு இயற்கை காட்சிகளை அள்ளி வழங்கும் அதிகம் பரபரப்பு இல்லாத கடற்கரையாக இருக்கிறது. கரடுமுரடான நீர் காரணமாக நீச்சல் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும் கடற்கரை நடை பயணங்களையும் கண்கொள்ள இயற்கை காட்சிகளையும் அனுபவித்து ரசிக்க முடியும்.
2.பங்காரம் கடற்கரை, லட்சத்தீவு
லட்சத்தீவில் உள்ள பங்காரம் தீவில் உள்ள பங்காரம் கடற்கரை இன்னும் அதிகமான மக்களால் தீண்டப்படாத ரத்தினமாக நீல தடாகங்கள் பவளப்பாறைகள் உள்ள இத்தீவிற்கு ஹெலிகாப்டர் மூலம் மழைக்காலங்களில் பார்வையாளர்களின் வருகை தருகின்றனர். கடற்கரையானது ஆழ்கடல் டைவிங், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற செயல்பாடுகளை வழங்குவதால் அமைதியான, சாகசப் பயணமாக இருக்கிறது
3.சந்திப்பூர் கடற்கரை, ஒடிசா
ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் கடற்கரை, கடல் குறைந்த அலைகளின் போது 1-5 கிலோமீட்டர் வரை பின்வாங்கி அதிக அலையுடன் திரும்புவது பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவத்தை உருவாக்குவதோடு கடற்பரப்பில் நடக்கும்போது சுகமான அனுபவத்தையும் கொடுக்கிறது.
4.மந்தர்மணி கடற்கரை, மேற்கு வங்கம்
இந்தியாவின் மிக நீளமான மோட்டார் கடற்கரைகளில் ஒன்றான மந்தர்மணி கடற்கரை கொல்கத்தாவில் இருந்து 180 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரை சிவப்பு நண்டுகள் மற்றும் அமைதியான சூரிய அஸ்தமனத்திற்கு பிரபலமானதோடு, கிரிக்கெட் போன்ற கடற்கரை விளையாட்டுகளுக்கும் கடலில் ஓய்வெடுப்பதற்கும் இடம் வழங்குகிறது.
5.குஹாகர் கடற்கரை, மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள குஹாகர் கடற்கரை தெளிவான நீர் மற்றும் மென்மையான மணலுக்கு பெயர் பெற்றதோடு இனிமையான ஒலிகளுடன் கூடிய அமைதியான இடமாகும். கூட்டம் அதிகமாக இல்லாதபோதும், பார்வையாளர்கள் ஜெட் ஸ்கீயிங் மற்றும் ஒட்டக சவாரி போன்ற செயல்களை அனுபவிக்க முடியும்.
6.லாலாஜி பே பீச், அந்தமான் & நிக்கோபார் தீவுகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள லாலாஜி பே பீச் வெள்ளை மணல் மற்றும் படிக தெளிவான நீரை உடைய அழகான அமைதியான மற்றும் படகுமூலம் சென்று இடையூறு இல்லாமல் இயற்கையை ரசிக்க மற்றும் ஓய்வெடுக்கக்கூடிய அற்புதமான கடற்கரையாகும்.
மேற்கூறிய ஆறு இடங்களும் சுற்றுலாவிற்கு சிறந்த இடையூறு இல்லாத கடற்கரையாக உள்ளன ஒரு முறை சென்று வருவோமா?