குழு பயணம் அல்லது தனிப் பயணம் எது சிறந்தது!

Which is better, group travel or solo travel!
payanam articles
Published on

ரு பயணத்தை திட்டமிடும்பொழுது தனியாக பயணம் செய்வது நல்லதா குழுவாக சொல்வதா என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தனி பயணத்தின் நன்மைகள்:

தனியாகப் பயணம் செய்வது நம்மை சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையாகவும் செயல்பட உதவும். 

நம் பயணத்திட்டத்தை நம் விருப்பம்போல் உருவாக்க உதவும். தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியும். 

நம் பட்ஜெட்டிற்கு ஏற்றபடி பயணத்தை மேற்கொள்ள உதவும். 

நமக்கு விருப்பமான இடங்கள் மற்றும் நாட்களை நம்மால் தேர்வு செய்து நம் விருப்பப்படி சென்று வர முடியும்.

தனி பயணத்தில் நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி முடிவுகள் எடுக்க முடியும்.

குழு பயணத்தின் நன்மைகள்:

குழு பயணம் என்பது நண்பர்கள் அல்லது உறவினர் களுடன் செல்லும் பொழுது நம்முடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

நம்முடைய சாகசப் பயணங்களை எதிர்கொள்ள உதவும்.

குழு பயணம் என்பது நமக்கு பாதுகாப்பான பயணமாக அமையும். சவாலான சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க, உதவி செய்து கொள்ள முடியும்.

தங்குமிடங்கள் மற்றும் சுற்றுப்பயணத்திற்கான செலவுகள் போன்றவை குறையும்.

குழு பயணம் என்பது உற்சாகம் நிறைந்ததாகவும், பொழுது போக்காகவும் இருக்கும். இதில் இனிமையான நினைவுகள் உண்டாவதுடன் நிறைய நட்புகளையும் பெற முடியும். 

ஒத்த எண்ணம் கொண்டவர்களுடனும், அன்புக்குரியவர்களுடனும் பயணம் செய்யும்பொழுது அவை நீங்காத நினைவுகளாக நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

தனிப்பயணம் Vs. குழு பயணம்:

தனி பயணத்தின் பொழுது சில சமயம் பாதுகாப்பு பற்றிய கவலை உண்டாகலாம். சில சமயம் தனிமையை உணரலாம். அறிமுகம் இல்லாத இடங்களில் செல்லும்பொழுது சிறிது அச்சம் வெளிப்படலாம்.

இதையும் படியுங்கள்:
தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?
Which is better, group travel or solo travel!

குழுவாக சேர்ந்து செல்வதால் திட்டமிடுவதில் நமது பங்கு குறைவாக இருக்கும். நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. குழுவோடு செல்லும்போது அவர்கள் சொல்லும் நேரத்திற்கு அனுசரித்து செல்வது நம் சுதந்திரத்தை பாதிக்கும். குழு பயணத்தில் சமரசம் முக்கியமானது. மற்றவர்களின் நலன்களையும், விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இப்படி இரண்டிலுமே சாதக, பாதக பலன்கள் இருப்பதால் எது சிறந்தது என்பதை தேர்வு செய்வது நம் கையில் உள்ளது. முடிவு எடுப்பதில் சுதந்திரம் வேண்டும், பட்ஜெட் ட்ரிப் போகலாம் என்று நினைப்பவர்கள் தனி பயணத்தை தேர்வு செய்யலாம். நட்பை வளர்த்துக் கொள்ளவும், தோழமையை பாராட்டவும், பாதுகாப்பு கருதியும் செல்ல விரும்புபவர்கள் குழு பயணத்தை தேர்வு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com