சுற்றுலா லக்கேஜிற்கு ஏற்றது பெட்டியா? பேக்கா?

Luggage
Luggage
Published on

சுற்றுலா பயணத்தை நல்ல நினைவுகளாக மாற்றுவதற்கு அனைத்தையும் முன்பே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. இதில் மிகவும் குறிப்பாக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல பெட்டி சிறந்ததா அல்லது பேக்குகள் சிறந்ததா என்ற குழப்பத்தை தீர்த்து வைக்கிறது இந்தப் பதிவு.

சுற்றுலாவிற்கு செல்லும் போது தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல உதவியாக இருப்பது பெட்டிகள் அல்லது பேக்குகள்தான். நாம் எடுத்துச் செல்லும் பொருள்களுக்கு ஏற்ப இவையிரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். சுற்றுலாவிற்கு செல்வதே மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான். இதில் லக்கேஜ் ஒரு தொல்லையாக மாறி விடக்கூடாது. ஆகையால் சுற்றுலாவிற்கு செல்வதற்கு முன்பே செல்லும் இடத்திற்கு ஏற்பவும், வாகனத்திற்கு ஏற்பவும் நமது பொருள்களை எடுத்துச் செல்ல எது சரியாக இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக காரில் சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்கள், தங்களின் லக்கேஜ் குறித்து எந்தக் கவலையும் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. லக்கேஜ்களை காரின் பின்புறத்தில் இருக்கும் டிக்கியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் விமானம், பேருந்து மற்றும் இரயில்களில் பயணிக்கும் போது லக்கேஜ்களை எடுத்துச் செல்வதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

விமானங்களில் லக்கேஜை எடுத்துச் செல்ல அதிக கட்டுப்பாடுகள் உண்டு. ஒவ்வொரு பயணிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு எடை கொண்ட லக்கேஜ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். லக்கேஜின் எடை கூடுதலாகும் போது, அதற்கேற்ப கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் எடை அதிகமாக இருக்கும் சூட்கேஸ் அல்லது பெட்டிகளை விடவும், எடை குறைந்த அதே நேரத்தில் உறுதியாக இருக்கும் பெட்டிகளை வாங்குவது சிறந்தது. சக்கரங்கள் உள்ள ட்ராலி பெட்டிகளும் சந்தையில் கிடைக்கின்றன. இவை எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும்.

ஒருவேளை நீங்கள் இரயிலில் பயணித்தால், பிளாட்பார்மில் நீண்ட தொலைவு லக்கேஜை எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா! முதுகில் சுமக்கும் பேக்குகளை விட இதற்கும் சக்கரங்கள் உள்ள ட்ராலி பெட்டிகள் வசதியாக இருக்கும். இவற்றை எளிதாக இழுத்துச் செல்ல முடியும். இரயிலில் லோயர் பெர்த் சீட்டுக்கு அடியில் வைத்து, சங்கிலியால் பூட்டு போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். இதில் பெட்டியின் அளவு சீட்டுக்கு அடியில் நுழையும் அளவிற்கு வசதியாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் போது கவனிக்க வேண்டியவை!
Luggage

பேருந்துப் பயணம் என்றால் சிறிய அளவிலான பெட்டி அல்லது பேக்குகளே போதுமானது. அதிகமான பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் விரிந்து கொடுக்கிற பைகள் இப்போது வந்துவிட்டதால், இவையும் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

நாம் சுற்றுலாவிற்கு செல்வதே சில நாட்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான். அங்கு, பெரிய அளவிலான லக்கேஜ்களை சுமந்து கொண்டு திரிவது நமது மகிழ்ச்சியை கெடுக்கும் வகையில் அமையலாம். ஆகையால், மனநிம்மதி உடன் சுற்றுலாவை அனுபவிக்க லக்கேஜில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com