வெள்ளை மணல் கடற்கரை முதல் எரிமலை சரிவுகள் வரை: உங்கள் அடுத்த ட்ரிப் இங்கேதான்!

Maluku Islands
Maluku Islands
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவுகள் (Maluku Islands) வரலாற்று சிறப்புமிக்க "ஸ்பைஸ் தீவுகள்" என அழைக்கப்படுகின்றன. பண்டா கடல் மற்றும் அராஃபுரா கடலுக்கு இடையே பரவியுள்ள ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டுள்ள இந்த இடம், உலகிலேயே முதன்முதலில் ஜாதிக்காய், கிராம்பு மற்றும் மேஸ் (mace) போன்ற நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்த இடமாகும்.

15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் இந்த மசாலாப் பொருட்கள் தங்கத்திற்கு இணையான மதிப்பை ஐரோப்பாவில் கொண்டிருந்ததால், போர்த்துகீசியம், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதுவே "ஸ்பைஸ் வார்ஸ் (Spice Wars) என அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் உலக வர்த்தக வரைபடத்தில் முக்கிய இடம் வகித்த இந்தத் தீவுகள், இன்று இந்தோனேசியாவின் மறைக்கப்பட்ட சொர்க்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தோனேசியா 17,000 தீவுகளைக் கொண்ட நாடாகும். அவற்றில் சுமார் 6000 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இந்தோனேசியா என்றதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பாலிதீவுதான். ஆனால் அதையும் தாண்டி பல தீவுகள் உள்ளன. ஸ்பைஸ் தீவுகள் என்று அழைக்கப்படும் மொலுக்காஸ்(மலுகு) தீவுகள் பிரமிக்க வைக்கும் இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இத்தீவுகள் வடக்கு மலுகு மற்றும் மலுகு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஹல்மஹேரா, செரம், புரு, அம்போன், டெர்னேட் மற்றும் பண்டா தீவுகள் அடங்கும்.

மலுகு தீவுகளில் மொத்தம் 1000 தீவுகள் உள்ளன. 77,990 கிமீ நிலப் பகுதியையும், 7,76,500 கிமீ கடற்பரப்பையும் கொண்டுள்ளன. இந்தோனேசியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுகள் ஒரு காலத்தில் உலகளாவிய மசாலா வர்த்தகத்தின் மையமாக இருந்தன. இன்று அவை அவற்றின் அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள், பசுமையான காடுகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் நிறைந்த படிகத்தெளிவான நீர் ஆகியவற்றால் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன.

இதையும் படியுங்கள்:
புதிய சூழல்... புதிய சுவாசம்: ஏன் நாம் அடிக்கடி பயணிக்க வேண்டும்?
Maluku Islands

வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் பசுமையான காடுகளுக்கு பெயர் பெற்ற அம்போன் மற்றும் கெய் தீவுகள் ஸ்னார்கலிங் (snorkeling), நீச்சல், எரிமலைகளின் சரிவுகளில் ஏறி அழகான காட்சிகளைக் காணுதல் என ஒவ்வொரு தீவும் மிக அழகான காட்சிகளை கொண்டுள்ளது. அத்துடன் உலகின் வேறு எந்த இடத்திலும் காணமுடியாத மரபுகள் மற்றும் மொழிகளும் இங்குள்ளன. அழகிய பாறைகள், வெப்பமண்டல கடற்கரைகள், காடுகள் நிறைந்த எரிமலைகள், நூற்றாண்டுகள் பழமையான கோட்டைகள் மற்றும் அழகான, வளமான உள்ளூர் கலாச்சாரம் ஆகியவற்றின் கலவையாக இத்தீவுகள் அமைந்துள்ளன.

மலுகு ஒரு தீவுக் கூட்டம் என்பதால் இங்கு ஏராளமான வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் பவளத்தீவுகள் உள்ளன. அம்போன், பண்டா தீவுகள் மற்றும் டெர்னேட்டில் ஏராளமான பவளப்பாறைகள் நிறைந்துள்ளன. இங்கு டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்றவையும், சூரிய குளியலும் புகழ்பெற்றவை.

தலைநகர் அம்போனில் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் தங்கும் இடங்கள், சொகுசு ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன.

க்வான்டாஸ் (Qantas) விமான நிறுவனம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து தினமும், மெல்போர்ன் நகரில் இருந்து வாரத்திற்கு 3 முறை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாக்கு (Jakarta) நேரடி விமான சேவையை வழங்குகிறது. அங்கிருந்து கருடா (Garuda) உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் அம்போன் (Ambon) நகருக்கு விமான சேவைகள் வழங்குகின்றன.

logo
Kalki Online
kalkionline.com