நாம் ஏன் பயணம் மேற்கொள்ள வேண்டும்?

Two peoples enjoying their vacation
Vacation
Published on

பயணத்தை விரும்புவோருக்கும் விரும்பாதவர்களுக்கும் உண்டாகும் தாக்கங்கள் என்னென்ன? இப்பதிவில் விரிவாக பார்ப்போம்:

நம் உலகில் நடக்கும் பல மாற்றங்களுக்கு காரணம் பயணம் மட்டுமே. ஒரு பறவை, ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு இடம் மாறுவது, செடியிலிருந்து விழும் விதை வேறொரு இடத்திற்கு காற்றின் மூலம் பயணிப்பது, மனிதன் பிழைப்பதற்காக வேறு நாட்டிற்கு போவது, என்று இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் பயணம் மூலம் தங்களுக்கான பரிணாம வளர்ச்சியை அடைகின்றன. இப்படிப்பட்ட பயணத்தால் நமக்கு உண்டாகும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. பயணம் உங்களை ஆரோக்கியமாக்குகிறது:

வருடத்திற்கு இரண்டு முறையாவது நீண்ட விடுமுறை எடுக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உண்மை! காரணம் ஒரு வீட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவதிலிருந்து பொது வெளி வரை, தங்களுக்கான அடையாளைத்தை உருவாக்க நினைக்கும் பெண்கள், அவர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சனைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கும் பொருட்டு பயணத்தை மேற்கொள்கிறார்கள். காரணம், வெவ்வேறு இடங்களில் காணும்  காட்சிகளின் அழகை அவர்கள் ரசிப்பதிலே பாதி மன அழுத்தம் பட்டு போல் பறந்து விடும்.

2. உள்ளூர் கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கான இணைப்பு:

ஒரு இடத்தை ஆராய்வது என்பது சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல; அது இணைப்புகளை உருவாக்குவது பற்றியது. ஒரு இடத்துடனோ அல்லது மக்களுடனோ நீங்கள் பிணைப்பை உணரும்போது, ​​உங்கள் பொது அறிவு  பல மடங்கு அதிகமாகும். இப்படி பல இடங்களுக்கு நீங்கள் சென்று வரும் பொது அங்குள்ள விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவருடன் பரிமாறிக் கொள்வதற்குமான வாய்ப்புகள் அதிகம்.

3. நினைவுகளை பகிர்ந்து கொள்வது:

சில பயணிகள் தங்கள் குடும்ப வரலாற்றுடன் இணைக்கப்பட்ட இடங்களை மீண்டும் பார்வையிடுகின்றனர். உங்கள் முன்னோர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த அதே மண்ணில் நின்று, அவர்களுடன் பகிர்ந்த நாட்கள் மற்றும் சிறு வயதில் செய்த சுட்டி தனங்கள் போன்றவற்றை ஒரு தடவை நினைவுக்கு கொண்டு வரும் போது, உங்களது மனம் புத்துணர்ச்சி அடைந்து உங்கள் கவலைகளை கரைய வைக்கும். 

இதையும் படியுங்கள்:
சொக்கவைக்கும் அழகு சுவிட்சர்லாந்து! - சுவிஸ் (செர்மட்) பயணக்கதை!
Two peoples enjoying their vacation

4. பயணங்களால் உருவாகும் மாற்றங்கள்: 

ஒரு பறவை தன் இனப்பெருக்கத்திற்காக நாடு விட்டு நாடு செல்வதும், அது குடியேறும் இடங்களில் உண்டாகும் பூச்சிகளை உண்பதும், அது செல்லும் இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

தாவரங்களில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையில் (Pollination) அதன் விதைகள் காற்றில் பறந்து பயணம் செய்வதால் தான் உலகெங்கும் மரங்கள் வளர்ந்து இந்த உலகை அழிவில் இருந்து காக்க முடிகிறது. 

இது போல் இன்றைய நவீன உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்து விதமான வசதி வாய்ப்புகளும் நம் முன்னோர்கள் மேற்கொண்ட பயணத்தால் தான் நம்மிடம் இருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.      

ஸ்டில்னஸ் டைலேமா  (Stillness Dilemma) பற்றி தெரியுமா?

அதிக நேரம் அல்லது அதிக நாட்கள் ஒரே இடத்திலே சுற்றிக்கொண்டிருப்பது  ஒரு வித சலிப்பைதான் ஏற்படுத்தும். அதனால் நாம் என்னதான் சுறுசுறுப்பாக இருக்க நினைத்தாலும் நாம் சோர்வாகதான் உணர்வோம்.

எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் இருந்து ஒரு பணியை செய்து வாழ்க்கையை வாழ்வது நம் மனதிற்கு அவ்வளவு நல்லதல்ல. காரணம் நம் வாழ்வில் பல பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை நாம் செய்யும் பணிகளின் மூலமோ அல்லது செயல்களின் மூலமோ எதிர்கொள்கிறோம். அதிலிருந்து வெளிவராமல்  நமக்குள்ளேயே பூட்டி வைத்து ஒரே இடத்தில் இருந்தால் அது சோர்வை  உருவாக்கி  நம் மனநலத்துடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதித்துவிடும்.     

ஆக, பயணம் நம் வாழ்க்கையை வளமாக்குகிறது, புதிய விஷயங்கள், நேசத்துக்குரிய நினைவுகள் மற்றும் புதிய இணைப்புகளை வழங்குகிறது. எனவே, நீங்கள் விமானத்தில் ஏறினாலும் அல்லது வீட்டின் அருகினிலே உள்ள பிடித்தமான இடத்தைச் சுற்றினாலும் , என்றைக்கும் உங்கள் பயணத்தைத் நிறுத்தாமல் ஓடிக் கொண்டே இருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com