ஹாரி பாட்டர் ரயிலில் பயணம் செய்யலாமா?

hogwarts train
hogwarts trainImage credit - almostginger.com
Published on

ஹாரி பாட்டர், நார்னியா போன்ற ஃபேன்டஸி படங்களை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. Hogwarts ரயில், மாயாஜால பள்ளி, பறக்கும் மந்திர துடப்பம் என்று நம்முடைய சிறுவயதினை மாயாஜாலமாக மாற்றியிருக்கும். அத்தகைய மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த ஹாரி பாட்டர் படத்தில் வரும் Hogwarts ரயிலில் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவோமா என்ன? அதுவும் நம்ம இந்தியாவிலே அப்படி ஒரு உணர்வை தரக்கூடிய ரயில் இருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஹாரி பாட்டரில் வரும் Hogwarts பள்ளிக்கு செல்லக்கூடிய ரயில் புகையை கக்கிக்கொண்டே வளைவான ரயில் பாலத்தில் செல்வது மிகவும் அழகாக இருக்கும். அந்த காட்சியை திரையில் பார்க்கும்போது இதில் நாமும் பயணிக்க முடியாதா? என்ற ஏக்கம் பலருக்கும் சிறுவயதில் வந்திருக்கும்.  

அந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில், அதுபோலவே அச்சுஅசலாக ஒரு ரயில் பாலம் இந்தியாவில் இருக்கிறது. கேரளாவில் இருக்கும் கொல்லத்தில் இருந்து தமிழ்நாட்டில் செங்கோட்டைக்கு செல்லும் வழியில்தான் அந்த அழகான ரயில் பாலம் அமைந்திருக்கிறது. கொல்லத்திலிருந்து செங்கோட்டை வரையிலான ரயில் பயணத்தில் மொத்தம் 94 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இந்த ரயில் பாதை 100 வருடங்கள் பழமையானதாகும்.

இந்த பாலத்தில் மொத்தமாக 13 வளைவுகள் அமைந்திருப்பதால், இந்த பாலத்தை 13 கண்ணாரா பாலம் அல்லது 13 ஆர்ச் பிரிட்ஜ் என்று அழைப்பார்கள். இது பிரிட்டிஷ்காரர்களால் 1904 ல் கட்டப்பட்ட பழமையான பாலமாகும். இந்த பாலத்தில் பயணிக்கும்போது ஹாரிபாட்டரில் வரும் புகை வண்டியில் பயணிக்கும் அனுபவத்தை தரும்.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள 3 கலர்ஃபுல்லான இடங்களைப் பற்றித் தெரிஞ்சிக்கலாம் வாங்க!
hogwarts train

உண்மையிலேயே ஹாரி பாட்டர் படங்களில் வந்த Hogwarts express புகை வண்டி ஸ்காட்லாந்தில் இருக்கிறது. அந்த ரயிலின் பெயர் Jacobite ஆகும்.

எனவே, ஹாரி பாட்டர் ரசிகர்கள் ஸ்காட்லாந்து சென்று Jacobite ரயிலில் பயணிப்பது சிரமம் எனில் கண்டிப்பாக நம்முடைய பக்கத்து மாநிலத்தில் இருக்கும் கொல்லம்- செங்கோட்டை ரயிலில் பயணித்து வெகு காலமாக இருக்கும் நம்முடைய சிறுவயது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com