குறைந்த பட்ஜெட்... நிறைந்த மகிழ்ச்சி! ஏழைகளின் ஊட்டி ஏலகிரிக்கு ஒரு விசிட் அடிப்போமா?

yelagiri-hills-
yelagiri-hills-
Published on

குறைந்த பட்ஜெட்டில் மலைப்பிரதேசத்தை பார்க்கவேண்டும் என்றால் சிறந்த இடமாக சுற்றுலா பயணிகளுக்கு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரியில் மிஸ் பண்ண கூடாத வகையில் பல இடங்கள் உள்ளன.

சென்னையிலிருந்து காரில் புறப்பட்டால் 4மணி நேரம் முதல் 5 மணி நேரத்திற்குள் போகலாம். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கடல் மட்டத்திலிருந்து 1048 .5 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ளது ஏலகிரி. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. ஏலகிரி மலைபாதையைப் கடந்து செல்வது ஒரு தனி சுகமாக இருக்கும். எப்படி போகலாம், அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் எவை என்பதை பற்றி பார்ப்போம்.

ஏலகிரி மலையில் வாகனங்கள் ஏறும்போது தைல மரக்காடுகள் நம்மை வரவேற்கும். அங்கேயே ரம்யமான சூழல் நமக்கு தென்படும் .ஏலகிரி மொத்த பரப்பு ம 30 சதுர கி. மீட்டர் ஆகும்.

ஏலகிரி மலையில் மங்களம், நிலாவூர், அத்தனாவூர், தாயலூர் உட்பட 14 கிராமங்கள் உள்ளது. ஏலகிரி மலை அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா போட் ஹவுஸ், மூலிகை பண்ணை, மலையேற்றம், சுவாமிமலை, பறவைகள் சரணாலயம் என பல்வேறு இடங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
குறைந்த செலவில் ‘ஹை-வேஸ்’ வியூ: மேகமலைக்கு இப்படி ஒரு வழியா?
yelagiri-hills-

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

ஏலகிரி மலையின் மறுபக்கத்தில் வலகம்பாறை நீர் வீழ்ச்சி உள்ளது. திருப்பத்தூரில் இருந்து பிச்சனூர் வழியாக 14 மீட்டர் தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் நீர் ஜடையனூர் என்ற இடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாக கொட்டுகிறது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தவறாமல் சென்று உற்சாக குளியல் போடலாம்.

புங்கனூர் ஏரி படகு சவாரி

ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் மறக்காமல் செல்லக்கூடிய இடம் புங்கனூர் ஏரி. ஏரியைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபாதை உள்ளது ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா உள்ளது. காலை ஆறு முதல் மாலை ஆறு வரை திறந்திருக்கும். ஏரியை ஒட்டி அமைந்துள்ள படகுசவாரி இல்லத்தில் சவாரி செய்ய படகும் கிடைக்கும். 20 நிமிடப்படகு சவாரி செய்ய ரூபாய் 50-ம், கால்மிதி படகு என்றால் ரூபாய் 200 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மூலிகை பண்ணை

படகு சவார செல்லும் சாலை நுழைவு வாயில் அருகே ஏலகிரி மூலிகைப்பண்ணை உள்ளது. இங்கு மூலிகைச் செடிகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. பலவித நோய்களுக்கும் பயன்படும் மூலிகைச் செடிகளை சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்கின்றனர். அது மட்டுமின்றி பூச்செடிகள், மலைத்தேன், காய்கறி விதைகள், நறுமணப்பொருட்கள் இங்கு குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.

இயற்கை பூங்கா

அடுத்ததாக சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் என்றால் அது இயற்கை பூங்கா. 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, புங்கனூர் ஏரி அருகே உள்ளது. இந்த பூங்காவில் செயற்கை நீர் வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா போன்றவை அமைந்துள்ளன. இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ 15ம், சிறியவர்களுக்கு ரூபாய் ஐந்தும் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் பூங்காவிற்கு செல்லலாம்.

இதையும் படியுங்கள்:
பல்கி பெருகிவிட்ட பயணங்கள்! வீடியோ போடும் கூட்டங்கள்!
yelagiri-hills-

ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் சென்று விட்டு வரலாம். தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி விரும்பும் இடத்தில் தங்கலாம். ஏலகிரியில் நாள் முழுக்க நான்கு பேர் சேர்ந்து காரில் சுற்றி பார்க்க வேண்டும் என்றால் ரூபாய் 1500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை சென்று அங்கிருந்து ஏலகிரி மலைக்கு பேருந்தில் பயணம் செய்யலாம்.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏலகிரி மலைக்கு பயணம் செய்யலாம்

சனி, ஞாயிறில் குறைந்த பட்ஜெட்டில் ஏலகிரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com