பட்டு போல் கூந்தல் வேண்டுமா? அப்ப இதை படிங்க...!

பட்டு போல் கூந்தல் வேண்டுமா? அப்ப இதை  படிங்க...!

கூந்தல் மிருதுவாக போஷாக்கோட இருந்தா தனி அழகை தரும். கூந்தல் அடர்த்தியாக வளர வாரம் ஒரு நாள் தலைக்கு மாஸ்க் போன்ற பேக்கை பயன்படுத்துங்கள். தினமும் நன்றாக படிய தலை சீவினால் ரத்த ஓட்டம் பாயும். அடர்த்தியாகவும் வளரும்.

வெந்தயம் மற்றும் குன்றி மணியை பொடி செய்து வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் போட்டு மூடி விடுங்கள்.

ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெயை உபயோகப்படுத்தத் தொடங்குங்கள். இந்தஎண்ணெய் வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் முடிஅடர்த்தியாக வளரும்.

முடி உதிர்தலை தடுத்தாலே பாதி பிரச்சனை போகும். வேப்பிலையை ஒரு கைப்பிடிஎடுத்து நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியேவிட்டு மறு நாள் அந்த நீரினால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம்இருமுறை செய்தால் முடி உதிர்தல் நிற்கும்.

அதிமதுரப் பொடியை நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். இதனுடன் கால் பாகம்பால் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால்கூந்தல் நன்றாக வளரும்.

கருவேப்பிலை கைப்பிடி மற்றும் 2 ஸ்பூன் சீரகம் எடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறியபின்வடிகட்டி அந்த எண்ணெயையை உபயோகித்து வந்தால் கூந்தல் கருகருவெனஅடர்த்தியாக வளரும்.

பப்பாளியின் சதை பகுதியை மசித்து அதனுடன் யோகர்ட்டை கலந்து தலையில்தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி கூந்தல் மிருதுவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com