ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
கார்ட்டூன்ஸ்: பிள்ளை

"மன்னர் ஏன் ராஜகுமாரிக்கு இப்ப சுயம்வரம் வேணாம்கிறார்?"
"லாக்டவுன்ல பியூட்டி பார்லர் எதுவும் கிடையாதே!"

—————-

கார்ட்டூன்ஸ்: பிள்ளை
கார்ட்டூன்ஸ்: பிள்ளை

"ஏண்டா திடீர்னு அப்படி வியர்த்துக் கொட்டுது!"

"இந்த வார ராசி பலன்ல எனக்கு எல்லாம் பாஸிடிவ்வா நடக்கும்னு போட்டிருக்கு! நேத்துதான் கொரோனா பரிசோதனை பண்ணியிருக்கேன். இன்னும் ரிசல்ட் வரலே. அதான்!
– சம்பத்குமாரி, திருச்சி

—————-

''தலைவர் இப்படி செய்வார்னு
யாரும் எதிர்பார்க்கவில்லைன்னு
சொல்றீயே…
அப்படி என்ன செய்தார்?"

"அரசியல் வாழ்வு போதும்னு சந்நியாசியாகப் போகப்போகிறாராம்!"

—————-

"மன்னர்
ஏன் அரண்மனைக்கு வரப்
பயப்படுகிறார்?"

"மகாராணி
மல்யுத்தப் பயிற்சி
பண்றாங்களாம்!"

—————-

"அவர் தன்னந்தனியா நடுநிசியில் எங்கேன்னாலும் போய் விடுவார்னு சொல்றியே…
அவர் பெரிய தைரியசாலியா?"

''ஆமாம்… செத்துபோய் ரெண்டு மாசம்தானே ஆச்சு!"
– து.சேரன், ஆலங்குளம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com