புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஏன் இத்தனை தாமதம்?

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஏன் இத்தனை தாமதம்?
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

 எஸ். சந்திரமௌலி

பிரிட்டனில் என்ன நடக்கிறது?

பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த போரிஸ்  ஜான்சன், கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அடுத்த பிரதமரை கட்சி தேர்ந்தெடுக்கும் வரை தானே பிரதமராக நீடிப்பேன் என்றும் தெரிவித்தார்.  புதிய பிரதமர் செப்டம்பர் 5 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டு, 6ஆம் தேதி பதவி ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.

இந்திய அரசியல் சாசனம் பிரிட்டிஷ் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நம் நாட்டு விதிமுறைகளின்படி ஒரு கட்சி அல்லது கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினால்,  அந்தக் கட்சி அல்லது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  புதிய பிரதமரைத் தேர்வு செய்வார்கள்.   சிம்பிளாக வேலை முடிந்துவிடும். ஆனால், கடந்த  இரண்டு மாதங்களாக பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  ஏன் இத்தனை தாமதம்? பிரிட்டிஷ் பிரதமரைத் தேர்ந்தெடுக்கக் கையாளப்படும் வழிமுறைதான் என்ன? வாருங்கள் பார்க்கலாம்!

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெறும். 2019ல் நடந்த பொதுத் தேர்தலில், பிரிடிஷ் பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 358 இடங்களில் வென்று, பெரும்பான்மை பெற்றது. அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட போரிஸ் ஜான்சன் பிரதமர் ஆனார். ஆனால் இப்போதைய சூழ்நிலை வேறு. பதவியில் இருந்த பிரதமர் ராஜினாமா செய்திருக்கிறார்.  உடனே, சுலபமாக வேறு ஒரு நபரை அந்தக் கட்சி பிரதமர் பதவிக்கு கை காட்டிவிட முடியாது. அதற்கென்று கடுமையான நெறிமுறைகள் ஊண்டு.

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற யாரும், பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம்.  அப்படி போட்டியிட விரும்புபவர்கள் 20 எம்.பி.க்களின் சிபாரிசுடன் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இறங்கலாம். முதல் ரவுண்டில் கட்சி எம்.பி.க்கள் அவர்களுக்கு அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்  30 ஓட்டுக்குக்  குறைவாக வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். அதன்படி எட்டில் மூன்று பேர்கள் முதல் கட்டத்திலேயே நீக்கப்பட்டார்கள்.  அடுத்து இரண்டாவது ரவுண்டு வாக்குப்பதிவு நடக்கும். இந்த ரவுண்டில் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றவர் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். இப்படியே இரண்டே இரண்டு வேட்பாளர்கள் அமையும்வரை வாக்கெடுப்பு தொடரும். இது முதல் நிலைத் தேர்வு.

அடுத்த கட்டத் தேர்வில், கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து மேற்கூறிய இருவரில் ஒருவரை கட்சியின்  தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். தற்போதைய நிலவரப்படி, 25 பவுண்டு கட்டணம் செலுத்தி, கன்சர்வேடிவ் கட்சியில் சுமார் இரண்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தபால் மூலமோ, ஆன்லைன் வழியாகவோ வாக்களிக்கலாம். இந்த வாக்களிப்பு  ஜூலை 21ஆம் தேதி துவங்கி, செப்டம்பர் 2ஆம் தேதி முடிவடையும். 5ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் யார் என்று முடிவு செய்யும். 6ஆம் தேதி பதவி ஏற்பு.

தற்போதைய நிலவரப்படி, ஆரம்பத்தில் எட்டு பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிட களமிறங்கினார்கள். அவர்களில் இறுதியாக வந்திருக்கும் இருவரில் ஒருவர் பெண். அவர் பெயர்: லிஸ் டிரஸ்.  இவர், போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் அயலுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்.  கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பிரபலமானவர்.  சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியபோது, அது தொடர்பாக முக்கிய பங்காற்றியவர். போரிஸ் ஜான்சன் பதவி விலகக்கூடும் என்பது தெரிந்ததுமே, பிரதமர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகிவிட்டார் லிஸ். கட்சியின் சக எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் அப்போதே  "ஃபிஸ் வித் லிஸ்" என்ற பெயரில் பார்ட்டிக்கள் நடத்தி, எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இறங்கிவிட்டார். தான் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரைப் போல ஓர் இரும்பு மனுஷி என்று கூறிக்கொள்பவர் லிஸ். பிரதமராகப் பதவி ஏற்ற முதல் நாலே வரிகலைக் குறைப்பேன் என்று கூறிவருகிறார்.

இவருக்குப் போட்டியாக கலத்தில் இருப்பவர் ரிஷி சுனாக்.  இவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர். கொரோனா காலத்தில் பல்வேறு தரப்பினரும் பயனடையும் வகையில் நிவாரணத் திட்டங்களை அறிவித்து, நல்ல பெயர் வாங்கினவர். இவரது தந்தை வழி தாத்தா இந்தியாவில் இருந்து கென்யாவுக்கும், தாய்வழி தாத்தா இந்தியாவில் இருந்து தான்சானியாவுக்கும்  சென்று, அங்கிருந்து பிரிட்டனுக்கு  1960களில் இடம்பெயர்ந்தவர்கள்.  42 வயதாகும் ரிஷி இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலும், அதன் பின் அமெரிக்காவில் ஸ்டன்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலும் படித்தவர். இவரது மனைவி அட்சதா, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியரின் மகள். பிரிட்டிஷ் பிரதமர் ரேஸில், ஆரம்பக் கட்டங்களில் வேகமாய் முன்னேறிய ரிஷி சுனாக் இப்போது சற்றே பின்தங்கி இருப்பதாய் சொல்கிறார்கள்.

செப்.5ஆம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்று தெரிந்துவிடும். 6ஆம் தேதி புதிய பிரதமர் பதவி ஏற்கும்வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார். இந்த காலகட்டத்தில், ஏட்டளவில் அவருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்றாலும் கூட, பெரிய அலவிலான கொள்கை முடிவுகளை அவர் எடுக்கக் கூடாது என்பது மரபு.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com