அக்ஷய திரிதியன்று கண்டிப்பாக வாங்க வேண்டிய 2 பொருட்கள்...என்ன தெரியுமா?

Akshaya trithi poojai
Akshaya trithi poojaiImage Credits: FirstCry Parenting

க்ஷய திரிதியை என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது தங்கம்தான். அந்த நாளில் எப்படியாவது ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் கூட்டம் தங்க நகைக் கடைகளில் அலை மோதுவதை பார்த்திருப்போம். ஆனால் தங்கத்தை விடவே செல்வம் வளர கண்டிப்பாக வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

அக்ஷய திரிதி மகாலக்ஷ்மிக்கு மிகவும் உகந்த நாளாகும். மகாலக்ஷ்மி தாயாரின் பார்வைப்பட்டு ஒரு ஏழைக்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிய காரணமாக ஆதிசங்கரர் கணகதாரா ஸ்தோஸ்த்திரம் அருளிய அற்புதமான நாள். சிவபெருமான் பிக்ஷாடணராக வரும் போது அம்பாள் அன்னப்பூரணியாக அன்னதானம் செய்த நாள். அக்ஷய பாத்திரத்தை பாண்டவர்கள் பெற்ற நாள். அக்ஷய திரிதியை 10ஆம் தேதி மே மாதம் 2024 ல் வருகிறது. அக்ஷய திரிதி என்பது தானம் செய்தால் வளரக்கூடிய நாள். அக்ஷய திரிதியை அன்று கட்டாயமாக கல் உப்பை வாங்கி வைக்க வேண்டும். மகாலக்ஷ்மி வாசம் செய்யும் கடலில் இருந்து உருவாக்கப்படும் கல் உப்பில் லக்ஷ்மி கடாக்ஷ்ம் நிறைந்திருக்கிறது. அதோடு மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சளையும் வாங்கி வைக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி...
மகாலக்ஷ்மி...

அரிசி, பருப்பு, கோதுமை போன்ற தானியங்களை தானம் கொடுக்கலாம். துணி தானம் கொடுக்கலாம். தானம் கொடுப்பதால் நமக்கு செல்வம் வளரும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை யாரேனும் இரண்டு பேருக்காவது  செய்ய வேண்டியது அவசியமாகும்.

இந்த நாளில் மகாலக்ஷ்மிக்கு நைவேத்தியமாக கல்கண்டு சாதம் அல்லது பால் பாயாசம் செய்யலாம். இது மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்ததாகும். வெள்ளிக்கிழமை அக்ஷய திரிதியை வருகிறது. அதனால் பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து வெள்ளை நிற மலர்கள் அல்லது செந்தாமரை கிடைத்தால் மகாலக்ஷ்மிக்கு வைக்கலாம். நைவேத்தியம் வைத்துவிட்டு யாருக்காவது தானம் வழங்கலாம்.

இதையும் படியுங்கள்:
தசாங்க பொடியின் பயன்கள் என்னென்ன? தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Akshaya trithi poojai

அக்ஷய திரிதியை வெள்ளிக்கிழமையில் வருவதால் சுக்கிர ஹோரையில் மகாலக்ஷ்மியை வழிபாடு செய்வது சிறப்பாகும். திரிதியை என்பது 10/5/24 காலை 6:33 துவங்கி 11/5/24 அதிகாலை 4:56 வரை உள்ளது. எனவே அக்ஷய திரிதியை அன்று காலை 6:30 முதல் 7:00 வரை பூஜையை முடிக்கலாம். காலை 9:00 முதல் 10:00 பூஜையை செய்யலாம். மதிய நேரம் 1:00 முதல் 1:30. மாலை 6:00 முதல் 9:00 வரை பூஜை செய்ய நல்ல நேரமாகும். இப்படி அந்த நாளில் எப்போது உங்களுக்கு சரி வருகிறதோ அந்த நேரத்தில் மகாலக்ஷ்மிக்கு பூஜையை செய்யலாம். எனவே அக்ஷய திரிதியையில் மகாலக்ஷ்மி தாயாரை சிறப்பாக வழிப்பட்டு பயன் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com