மகாலட்சுமியின் அருள் கிடைக்கச் செய்யும் 6 பொருட்கள்!

To get the grace of Mahalakshmi...
Goddess Mahalakshmi.
Published on

வ்வொருவர் வீட்டிலும் மகாலட்சுமி வாசம் செய்யவேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். செல்வ செழிப்பிற்கும் அமைதியான வாழ்க்கைக்கும் மகாலட்சுமியின் ஆசி அவசியம். மகாலட்சுமியின் அற்புதங்கள் கிடைக்கும் பொருட்கள் பற்றிய பதிவுதான் இக்கட்டுரை.

1.தூபம் போடுதல்

வீடு மற்றும் கோவிலில் தூபம் போடுவதால் நேர்மறையான அதிர்வுகள் அதிகரித்து நறுமணம் கமழ்ந்து மங்களகரமானதாக கருதப்படுவதால் எதிர்மறை ஆற்றல் வீட்டை விட்டு வெளியேறி வீட்டில் அமைதியும் செல்வ செழிப்பும் ஏற்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சந்தன தூபம் போட மகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் வாசம் செய்வாள்

2.மூங்கில் செடி

மூங்கில் செடி வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்கிறது. இதனுடன் வீட்டில் மூங்கில் மட்டுமின்றி மணி பிளாண்ட்டையும் வைப்பது மங்களகரமானது. இந்த இரண்டு செடிகளும் வீட்டில் இருந்து வறுமையை நீக்கி, லட்சுமி தேவியின் அருள் ஆசியை நமக்கு அளிக்கின்றன.

3.குதிரைக் காலணி

கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் குதிரைக் காலணிகள் தொங்கும்.  புனித நூல்களின்படி, குதிரைக் காலணிநல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளம் மற்றும் மகிழ்ச்சி, செழிப்புக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எனக்கு ராஜாவாக நான் வாழ்வது எப்படி?
To get the grace of Mahalakshmi...

4.சங்கு

சங்கு வழிபாட்டிற்கு மட்டுமல்ல, அதன் இருப்பு வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கிறது. சங்கு ஊதி வழிபட்டால் லட்சுமிதேவி வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

 5.மயில் இறகு

மயில் இறகுகளைப் பயன்படுத்துவது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதற்கு வழிவகுக்கும். பூஜை அறையை தவிர மற்ற இடங்களில் வைத்தால் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே, மயில் இறகுகளை வைக்க சிறந்த இடம் பூஜை அறையாகும்.

6.யானை

யானை எப்போதுமே சக்தி மற்றும் புத்திசாலித்தனத்தின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் யானை சிலை இருப்பது பலன் தரும். எந்த வகையான சிலையும் மங்களகரமானதாக இருந்தாலும், யானையின் சிலை சிறியதாகவும் வெள்ளை நிறமாகவும்இருந்தால், அது மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேற்கண்ட ஆறு பொருட்களை வீட்டில் பயன்படுத்தி மகாலட்சுமியின் அருளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com