மகாலட்சுமியை மகிழ்விக்கும் 6 விஷயங்கள்!

To be happy and prosperous at home
Mahalakshmi
Published on

வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் இருக்க மகாலட்சுமியை மகிழ்விக்க வேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து எதிர்மறை ஆற்றலை குறைக்க வாஸ்துபடி செய்ய வேண்டியவற்றை இப்பதிவில் காண்போம்.

1.துளசி வழிபாடு

நாள்தோறும் துளசி செடிக்கு அர்ச்சனை செய்து துளசி மாடத்தின் முன் நெய் தீபம் ஏற்றி காலையிலும் மாலையிலும் வழிபட்டு லட்சுமி மந்திரங்களை பாராயணம் செய்வது பண சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். மேலும் துளசி அன்னை லட்சுமியின் வடிவமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதும் மிகவும் சிறந்தது.

2. வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்:

வீட்டில் உள்ள அழுக்கு எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்பதால் எப்போதும் வீட்டை குப்பை கூளங்கள் இன்றி சுத்தமாக வைத்திருப்பதோடு அங்கும் இங்கும் இருக்கும் பொருட்களை எடுத்து ஒழுங்குப்படுத்தி வைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி உடைந்த கண்ணாடி நாற்காலி போன்ற பொருட்கள் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. வாழை மர வழிபாடு:

வீட்டில் சந்தோசமும் செல்வ செழிப்பும் ஏற்பட வியாழக்கிழமை தோறும் வாழை மரத்திற்கு முன் காலையில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் இது நிதி பிரச்னைகளை தீர்க்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?
To be happy and prosperous at home

4. தீபம் ஏற்றவும்:

தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் தீபம் ஏற்றுவதோடு வீட்டின் நுழைவாயிலில் தீபம் ஏற்றுவது நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் வரவழைக்க உதவும் குறிப்பாக மாலை வேளையில் பிரதான நுழைவாயிலில் தீபம் ஏற்றுவது லட்சுமி தேவி வரவேற்பதாகவே அர்த்தம்.

5.இருள்:

பொதுவாக வீட்டின் எந்தப் பகுதியிலும் இருள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் மாலை வேளையில் தெய்வங்கள் சுற்றுலா செல்வதாக நம்பப்படுகிறது. மாலையில் இருள், வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வீடு வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

6.கற்றாழை

வீட்டில் அவசியம் சிறிய தொட்டிலாவது கற்றாழை செடியை வளர்க்க வேண்டும் கற்றாழை நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மையுடையது என நம்பப்படுகிறது. 

மேற்கூறிய 6 விஷயங்களும் மகாலட்சுமியை மகிழ்வித்து வீட்டிலேயே தங்க வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com