மகாராஷ்டிரா மாநிலத்தின் அஷ்ட விநாயகர் ஆலயங்கள்!

Ashtavinayak Temples
Ashtavinayak Temples

மகாராஷ்டிரா மகாணத்தில் உள்ள புகழ் பெற்ற அஷ்ட விநாயகர்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த எட்டு பிள்ளையார்களும் சுவயம்புவாக தோன்றியவர்கள். வேண்டிய வரங்களை கொடுப்பவர்கள் என்று பக்தர்களால் நம்பபடுகின்றது. முதலில் மொர்க்காவுன் என்ற இடத்தில் இருக்கும் மொரேஸ்வர் கோவிலில் யாத்திரை துவக்கி எட்டு பிள்ளையார்களையும் தரிசித்து, வணங்கி வழிபட்டு யாத்திரை துவங்கிய இடத்தில் முடிவு செய்வார்கள்.

1. மொரேஸ்வர் கோவில் (Moreshwar Temple, Morgaon)

Moreshwar Temple, Morgaon
Moreshwar Temple, Morgaon

மொர்க்காவுன் சுமார் 50 அடி உயரம் இந்த கோவில். இங்கு பொதுவாக சிவன் கோவிலில் காணப்படும் ஒரு பெரிய நந்தி உள்ளது. ஒரு பெரிய மூஞ்சுரும் உள்ளது. முக்கிய வாயில் வடக்கு பக்கம் நோக்கியுள்ளது. இங்கு பிள்ளையார் மயில் மீது அமர்ந்து தரிசனம் அளிப்பதால், இவரை மயூரேஸ்வர் என்றும் அழைக்கின்றனர்.
புனே நகரத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

2. சித்திவினாயக் கோவில் (Siddhivinayak Temple, Siddhatek)

Siddhivinayak Temple, Siddhatek
Siddhivinayak Temple, Siddhatek

அஹமத் நகர் மாவட்டத்தில் சித்தஹாதேக் என்ற கிராமத்தில் உள்ளது. இங்கு விஷ்ணு சிறப்பான சக்தி (சித்தி) பெற்றதாக ஐதீகம். இந்த கோவில் சிறிய மலையின் மேல் உள்ளது. இந்த மலையை பக்தர்கள் பிரதட்சனமாக ஏழு முறை சுற்றி வருவதை காணலாம். இங்கு இருக்கும் பிள்ளையார் சுமார் மூன்று அடி உயரம் உள்ளவர். எட்டு பிள்ளையார் கோவில்களில் இந்த விநாயகருக்கு மட்டும் தான் துதிக்கை வலப்புறம் உள்ளது. வலம்புரி விநாயகர் ஆவார்.இந்த கோவில் இந்தோரை சார்ந்த அகில்யபாய் ஹோல்கர் என்பவரால் 18 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பட்டது.

3. பால்லலேஸ்வர் கோவில் (Ballaleshwar Temple, Pali)

Ballaleshwar Temple, Pali
Ballaleshwar Temple, Pali

இந்த கோவிலின் இருப்பிட்டம் பலி (Pali) என்ற கிராமத்தில், ரெய்காட் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவில் மட்டும் தான் பக்தர் ஒருவரது பெயரிலேயே அமைந்துள்ளது. முதலில் இந்த கோவில் மரத்தினால் இருந்தது.1760 ல் கற்கள் கொண்டு கட்டப்பட்டது. கிழக்கு நோக்கி இருக்கும் இந்த கோவிலில் உள்ள விநாயகர் மீது காலையில் சூரிய ஒளி கதிர்கள் படுவதையும் தரிசினம் செய்யலாம். இந்த கோவிலில் பிற விநாயகர் கோவில்களில் வழக்கமாக கொடுக்கப்படும் கொழுக்கட்டைக்கு பதிலாக பேசன் லட்டு பிரசாதமாக வழங்க படுகின்றது.

இதையும் படியுங்கள்:
சுனாமி ஏன் திருச்செந்தூர் முருகன் கோவிலை தாக்கவில்லை தெரியுமா?
Ashtavinayak Temples

4. வரத்விநாயக் கோவில் (VaradVinayak Temple, Mahad)

VaradVinayak Temple, Mahad
VaradVinayak Temple, Mahad

மஹத் கிராமத்தில் உள்ளது . இந்த கோவில் 1725 ல் கட்டப் பட்டது. நந்தா விளக்கு, 1892 ஆம் ஆண்டு முதல் எரிந்துக் கொண்டு இருக்கின்றது. இங்கு பக்தர்கள் கர்பகிரகத்திற்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதியுண்டு. இதுவும் ரெய்காட் மாவட்டத்தில் உள்ளது.

5. தியூர் சிந்தாமணி கோவில்,தியூர் (Chintamani Temple, Theur)

Chintamani Temple, Theur
Chintamani Temple, Theur

இந்த கோவில் வடக்கு திசை நோக்கி உள்ளது. புனேவில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது மிகவும் பழமையான கோவில் ஆகும். பேஷாவர் வம்சத்தினர் ஆளுமையின் பொழுது மிகவும் போற்றப் பட்டதாகும். குறிப்பாக மாதவராவ் ஆண்ட பொழுது (1745 - 1772 ) இந்த கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுபிக்கப்பட்டது. இந்த கோவிலை சுற்றி வேறு சில கோவில்களும் உள்ளன.

6. லென்யாத்ரி (Girijatmaj Temple, Lenyadri)

Girijatmaj Temple, Lenyadri
Girijatmaj Temple, Lenyadri

மலைமேல் விநாயகர். இது ஒரே கல்லில் ஆன மலையில் உள்ள குகை கோவில். 300 க்கும் மேல் உள்ள படிகள் உள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்களால் ஒரே இரவில் உருவாக்கப் பட்டதாக நம்ப படுகின்றது. இங்கு தான் கணபதியின் பிறப்பிடம் என்றும் கூறுகிறார்கள். இந்த கோவிலுக்கு கிரிஜாத்மஜ் கணபதி கோவில் என்றும் பெயர் உண்டு.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: அம்பிகை அன்னம் பாலிக்கும் காசி க்ஷேத்திரத்தில் பசியோடு அலைந்த வியாசர்!
Ashtavinayak Temples

7. ஒசர் விக்னேஸ்வர் (Vignahar Temple, Ozar)

Vignahar Temple, Ozar
Vignahar Temple, Ozar

புனேவிலிரு ந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது குக்கடி நதி கரையில் உள்ளது. இந்த கோவிலில்10 அடி சலவை கல்லால் ஆன மூஞ்சுருவை தரிசிக்கலாம். இங்கு விநாயகருடன் சித்தி, ரித்தி இருவரையும் தரிசிக்கலாம். இந்த கோவில் விநாயகரை தரிசித்தால் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் தடைகள் நீங்கும் என்று நம்ப படுகின்றது.

8. ரஞ்சன்கான் மகா கணபதி (Mahaganapathi Temple, Ranjangaon)

Mahaganapathi Temple, Ranjangaon
Mahaganapathi Temple, Ranjangaon

இங்கு இருக்கும் மகா கணபதி அவருடைய தந்தை சிவன் அசுரன் திரிபுராசுரனை அழிக்க உதவியதாக தல புராணம் கூறுகின்றது. போர் ஆரம்பிக்கும் முன்பு இந்த கணபதிக்கு சிவன் உரிய மரியாதை செலுத்தாததால், அவருடைய தேர் கீழே விழும்படி செய்தாராம். சிவனும் தன் தவற்றை உணர்ந்து இந்த கணபதிக்கு உரிய மரியாதை செல்லுத்தி, அசுரனை வதம் செய்தாராம்.

இந்த 8 கோவில்களில் கணேஷ் சதுர்த்தியும், கணேஷ் ஜெயந்தியும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புனே, மும்பையில் இருந்து சென்று தரிசித்து வர டூரிஸ்ட் பஸ்கள், கார்கள் வசதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com