தமிழகத்தில் பாம்பு வழிபாட்டிற்கென அமைந்த பெரிய கோவில்!

நாகராஜா கோவில்...
நாகராஜா கோவில்...

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். நாக தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கும் இந்த கோவில் சிறந்த பிரார்த்தனை தலமாக அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஓடவள்ளி என்னும் கொடி தல விருட்சமாக உள்ளது. தீர்த்தம் நாக தீர்த்தம்.

நாகர்கோவில் நாகராஜா கோவிலின் முக்கிய பிரசாதம் மண்ணாகும். நாகராஜர் இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. வயல் இருந்த இடம் என்பதால் இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாக தருகிறார்கள்.இந்த மண் ஆறு மாத காலம் (ஆடி முதல் மார்கழி வரை) கருப்பு நிறமாகவும், மீதமுள்ள நாட்களில் (தை முதல் ஆனி வரை) வெள்ளை நிறமாகவும் இருப்பது அதிசயமான ஒன்று. 

நாகராஜா கோவில் கருவறையின் மேற்கூரை ஓலை வேயப்பட்டதாக உள்ளது. இங்கு மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே உள்ளது. மூலவரின் தண்ணீரிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றிலிருந்து எடுக்கப்படும் மண் தான் இக்கோவிலின் முக்கிய பிரசாதம் ஆகும். எவ்வளவோ காலமாக எடுத்தும் மண் குறையாமல் இருப்பது அதிசயத்தக்க ஒன்றாகும். இந்த புற்று மண் பல வியாதிகளை குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.

இக்கோவில் கருவறையில் விமானமும் கிடையாது. பீடமும் கிடையாது. ஓலையால் வேயப்பட்ட கூரை மட்டும்தான் உண்டு.

நாகராஜா கோவில்...
நாகராஜா கோவில்...

பொதுவாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றதாகும்.

ஓலைக் கூரை சன்னதி. மூலஸ்தானத்தில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இக்கோவிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளனர். நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால் நாகங்களையே துவாரபாலர்களாக அமைத்துள்ளனர். சன்னதிக்கு எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்ப வடிவில் உள்ளது. தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும் இவையே கோயிலை பாதுகாப்பதாகவும் சொல்கின்றார்கள். நாகங்கள் வசிப்பதற்கு ஏற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் ஓலையைப் பிரித்து புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியையும் செய்கின்றனர்.

இங்கு தினமும் காலை 10 மணிக்கு பாலாபிஷேகம் நடக்கின்றது. நாகராஜாவிடம் வேண்டி கோரிக்கை நிறைவேறியவர்கள் பால் பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள்.

கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாகர் சிலைகளை அமைத்து நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும் உண்டு.

இக்கோவிலில் கேரள முறைப்படி பூஜை நடக்கின்றது. கிழக்கு நோக்கிய கோவில் இது என்றாலும் தெற்கு வாசலே பிரதானமாக உள்ளது. இந்த வாசலை "மகாமேரு மாளிகை" என்று அழைக்கிறார்கள். மாளிகை வடிவில் உயரமாக அமைந்த வாசல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் போக்கி சீரான தூக்கத்தைத் தரும் ஜாதிபத்திரி!
நாகராஜா கோவில்...

தல வரலாறு: 

பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதை கண்டு பயந்து ஊருக்குள் சென்று மக்களிடம் கூற அவர்கள் இங்கு வந்தபோது நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருப்பதை கண்டனர். பின்பு நாகராஜரை சுற்றிலும் ஓலை குடிசை வேய்ந்து சிறிய சன்னதியை அமைத்தனர். களக்காடு மன்னர் மார்த்தாண்ட வர்மா தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவர் இங்கு வந்து சுவாமியே வழிபட்டு நோய் நீங்க பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னர் இங்கு பெரிய அளவில் கோவில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும் "நாகர்கோவில் "என பெயர் வந்தது. தமிழகத்திலேயே பாம்பு வழிபாட்டிற்கு என அமைந்த பெரிய கோவில் இந்த நாகர்கோவிலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com