பத்ம பீடத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கையின் அபூர்வ கோலம்!

Vishnu Durga temple
Anmiga katturaigal
Published on

விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருநாமம் திருமூலநாதர் . இறைவியின் திருநாமம் அபிராமி அம்மை.

கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை, பராந்தகச் சோழன் கட்டியதாக கல்வவெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. மேலும் ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன், குலோத்துங்கன் ஆகியோரது கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகிறது. இக்கோவிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்aசிறப்புடையவை. அதனால், இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை பராமரிப்பின் கீழ், மரபுச் சின்னமாக உள்ளது.

பொதுவாக சிவாலயங்களில் துர்கை அம்மன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற வண்ணம் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கை, மகிஷனற்று பத்ம பீடத்தில் நின்றவண்ணம், பின்னிரு கரங்களில் எறிநிலை சக்கரமும், சங்குமேந்தி முன்னிடக்கரம் தொடையிலிருத்தி வலது கரத்தில் அருள் புரியும் கோலத்தில் காட்சி தருகிறாள். இது விஷ்ணு துர்க்கையின் ஓர் அபூர்வ தோற்றமாகும்.

இதையும் படியுங்கள்:
வேண்டிய வரம் தரும் வேதாள வழிபாடுள்ள முருகன் கோவில் பற்றித் தெரியுமா?
Vishnu Durga temple

கோவிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே மிக துல்லியமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

இந்த ஆலயத்தில் இருக்கும் விஷ்ணு துர்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலம் நேரத்தில் எலுமிச்சம்பழத்தின் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் கடன் பிரச்னை திருமணத்தடை போன்றவை நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

பிரதோஷ காலத்தில் மூலவரான திருமூலநாதருக்கு தேன் அபிஷேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் இனிமையான வாழ்க்கை இன்பமயமான வாழ்க்கை அமைவதாக கூறப்படுகிறது. 

மாத சிவராத்திரி, ஞாயிறு வெள்ளி ராகு கால பூஜை பிரதோஷம், போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது.

கோவில் இருப்பிடம்: 

விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து பேரங்கியூர் கிராமம் செல்ல நகரப்பேருந்து வசதி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com