வாராகியின் பரிபூரண அருள் ஆஷாட நவராத்திரி! (ஜூலை 6 முதல் ஜூலை 15 வரை)

வாராகி அம்மன்...
வாராகி அம்மன்...

ன்றைய காலத்தில் அதிக அளவில் வணங்கக்கூடிய தெய்வங்களில் ஒருவராக திகழ்பவள்தான் வாராகி அம்மன். இவள் நிலத்திற்கு உரியவளாக கருதப்படுகிறாள். கையில் கலப்பை ஏர் என்று விவசாயம் தொடர்பான கருவிகளை வைத்திருக்கும் தெய்வமாகவும் இந்த வாராகி அம்மன் திகழ்கிறார். இந்த தெய்வத்தை விவசாயிகள் வழிபடுவதன் மூலம் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு உரித்தான ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மனை வீட்டில் எந்த முறையில் எளிமையாக வழிபடுவது என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆஷாட நவராத்திரி வழிபாடு

பஞ்சமி திதியில் வாராகி அம்மனை வழிபாடு செய்வது என்பது சிறப்பு. வாராகி அம்மனை தொடர்ச்சியாக வழிபடுபவர்கள் கண்டிப்பான முறையில் வாராகி அம்மனுக்கே உரித்தான நவராத்திரியில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த நவராத்திரியை ஆஷாட நவராத்திரி என்று கூறுகிறோம். இந்த நவராத்திரி வருகின்ற ஜூலை மாதம் 6ஆம் தேதி ஆரம்பித்து ஜூலை மாதம் 15ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த காலங்களில் வீட்டில் வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

கலசம் வைத்து வழிபடும் பழக்கம் இருப்பவர்கள் கலசம் வைத்து வழிபடலாம். பழக்கம் இல்லை அல்லது புதிதாக இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கலசம் ஏதும் வைக்காமல் எளிமையான முறையில் வீட்டில் வராகி அம்மனை வழிபாடு செய்யலாம். இந்த நவராத்திரி சமயத்தில் வாராகி அம்மன் சிலை இருக்கும் பட்சத்தில் பசும்பாலால் தினமும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். படமாக இருக்கும் பட்சத்தில் அம்மனை துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அப்படி படங்களோ சிலையோ இல்லாத பட்சத்தில் புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றும் பொழுது “ஓம் வாராகி அம்மனே போற்றி ஓம் வராகி அம்மனே வருக வருக” என்று கூறியவரே தீபத்தை ஏற்ற வேண்டும்.

இந்த நவராத்திரி சமயங்களில் வாராகி அம்மனுக்கு பிடித்தமான பொருட்களான பூமிக்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு பொருட்கள் அதிலும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வதுதான் சக்கரவள்ளி கிழங்கு. அதனால் இந்த ஒன்பது நாட்களில் ஒரு முறையாவது சக்கரவதி கிழங்கையும் வராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். இது இல்லாமல் கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட வடை, நிலக்கடலை, சுண்டல், பருப்பு வடை போன்ற பொருட்களையும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

இந்த ஒன்பது நாட்களும் தொடர்ச்சியாக விளக்கேற்றி வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இந்த நவராத்திரியில் வரக்கூடிய முக்கியமான இரண்டு நாட்களை தவறவிடாமல் வழிப்பட்டால் இந்த 9 நாட்களும் வழிபட்டதற்கு சமமான பலனை பெற முடியும். அந்த நாட்கள்தான் வளர்பிறை பஞ்சமியும், அஷ்டமியும்.

இதையும் படியுங்கள்:
சாம்பாருக்கும் மராத்திய மன்னர் சாம்பாஜிக்கும் உள்ள தொடர்பு!
வாராகி அம்மன்...

இந்த ஆஷாட நவராத்திரியில் தினமும் வாராகி அம்மனின் மூல மந்திரத்தையும் காயத்ரி மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். இந்த நவராத்திரியில் வாராகி அம்மனை வழிபடுவதன் மூலம் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு இருப்பவர்களுக்கு நோய்கள் தீரும். கடனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கடன் அடையும். மனக்கஷ்டம் நீங்கும். காரிய சித்தி உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளும் எதிரிகளும் நீங்குவார்கள். பய உணர்வு நீங்கும் குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.

பல அற்புதமான பலன்களை தரக்கூடிய இந்த ஆஷாட நவராத்திரியை தவறவிடாமல் இந்த முறையில் வழிபாடு செய்து மேற்சொன்ன அனைத்து பலன்களை பெற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com