வாசுகி நாகம் வழிபட்ட திருவாளப்புத்தூர் ரத்தினபுரீஸ்வரர்!

ரத்தினபுரீஸ்வரர் ஆலயம்
ரத்தினபுரீஸ்வரர் ஆலயம்
Published on

திருவாளபுத்தூரில் உள்ள ரத்தினபுரீஸ்வர சுவாமி ஆலயம் தான் வாசுகி ஆராதனை செய்த ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் மாணிக்க வண்ண சுவாமி.

தேவர்கள் அமுதம் எடுக்க மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர். இதனால் வாசுகியின் உடல் நலிவுற்றது. தனது உடல் நலம் பெற மாணிக்க வண்ண சுவாமியை, தினமும் ஆராதனை செய்து வந்தது வாசுகி. இதையடுத்து அதன் உடல் வலிமை பெற்றது. அதன் பிறகு அனுதினமும் மாணிக்க வண்ண சுவாமியை வழிபட நினைத்த வாசுகி, அந்த தலத்தில் உள்ள தல விருட்சமாக வாகை மரத்தடியில் குடிகொண்டாள்.

திருவாளபுத்தூரில் உள்ள ரத்தினபுரீஸ்வர சுவாமி ஆலயம் தான் வாசுகி ஆராதனை செய்த ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் மாணிக்க வண்ண சுவாமி. இறைவனின் இன்னொரு பெயர் ரத்தினபுரீஸ்வரர். இறைவி பெயர் வண்டமர் பூங்குழலம்மை நாயகி என்பதாகும். அன்னையின் இன்னொரு பெயர் ப்ரமர குந்தலாம்பாள்.

இறைவன் மாணிக்க வண்ண சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் நடன விநாயகர் ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இது மிகவும் அபூர்வமான காட்சி என பக்தர்கள் கூறுகின்றனர். தேவ கோட்டத்தின் மேல்புறம் லிங்கோத்பவர். வடபுறம் பிரம்மா, அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை திருமேனிகள் உள்ளன.

லிங்கத் திருமேனி...
லிங்கத் திருமேனி...

பிரகாரத்தின் தென்புறம் மெய்கண்டார், மேல்புறம் விநாயகர், வள்ளி, தேவசேனா, முருகன், கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு வடக்குப் பிரகாரத்தில் இரண்டு சண்டீஸ்வரர் சன்னிதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒன்று இறைவனின் வடக்குப் பிரகாரத்திலும் இன்னொன்று இறைவிக்கு அருகேயும் உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் இரட்டைப் பைரவர், சூரியன், சந்திரன், திருமேனிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் தலவிருட்சமான வாகை மரம் உள்ளது. அதன் மேடையில் வாசுகி, கணபதி, அஷ்ட நாகர்கள் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
கால் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள 7 எளிய வழிகள்!
ரத்தினபுரீஸ்வரர் ஆலயம்

பில்லி சூன்யம் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் நம் தமிழ்நாட்டில் அபூர்வம். அத்தகைய சக்தி படைத்த துர்க்கை அருள்பாலிக்கும் தலம்

எங்கே இருக்கு:

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் - பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ள, மணல்மேட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருவாளப்புத்தூர் என்ற இந்த தலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com