
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராமானுஜருக்கு தீபாவளி முதல் தை மாதம் வரை வென்னீர் அபிஷேகம் செய்கிறார்கள். கைலாயத்தில் உள்ள பூதக்கணங்கள் சிவனின் சாபத்திற்கு ஆளாயினர்.
சாப விமோசனம் பெற மகாவிஷ்ணுவை அவர்கள் சரணடைய ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அனந்த சரஸ் குளக்கரையில் காட்சியளித்து சாபம் நீக்கம் அளித்தார். இதற்கு நன்றி கடன் கடனாக பூதக்கணங்களால் இந்த ஸ்ரீபெரும்புதூர் கோவில் கட்டப்பட்டன. இதனால் பூதப்புரி எனப்பட்ட இந்த தலம் பிற்காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் எனப்பட்டது. இறைவனின் பெயர் ஆதி கேசவபெருமாள் இறைவனின் பெயர் யதிராஜ வல்லி.
இங்கு வாழ்ந்த கேசவன் சோமையார்ஜு காந்திமதி தம்பதிக்கு 1017 இல் பிறந்தவர் ராமானுஜர். விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உபதேசித்தார். இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர் ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்திற்கு எழுந்தருள்வார்கள். அப்போது சொர்க்கவாசல் திறப்பதைபோல இங்குள்ள மணிக்கதவை திறப்பார்கள்.
தை மாதம் அஸ்தம் நட்சத்திர வரை இராமானுஜருக்கு வென்னீரால் அபிஷேகம் செய்வார்கள் குளிர்காலம் என்பதால் ராமானுஜருக்கு கோட் கம்பளி போர்த்துவார்கள். உடல் முழுவதும் போர்த்த வெல்வெட் அங்கி உல்லன் சால்வை தலை முதல் பாதம் வரை போர்த்த குன்சம் என்னும் ஆடையும் அணிவிக்கப்படுகிறது.
ஐந்து நிலை ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும் துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் இந்த கோவிலில் காணலாம். துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து வணங்கிவிட்டு படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் ராமானுஜரின் சன்னதி அமைந்துள்ளது. சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புதமான அமைதியான திருமேனியை தரிசிக்கலாம்.
இருகரம் கூப்பி நாம் வணங்கினால் நம்மையும் வணங்குகிறார் கிழக்கு நோக்கிய முகம் மண்டலத்துடன் ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்யலாம். ஸ்ரீ ராமானுஜர் திருப்பாற்கடலில் ஸ்ரீமன் நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன் ராமாவதாரத்தில் ராமர் தம்பி லட்சுமணனாகவும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்கின்றன புராணங்கள்.
அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீ ராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.
ஆதிசேஷனின் அம்சமான ராமானுஜரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம் புத்திர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாத கோளாறுகள் போன்ற கால சர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊரின் நடுவில் கோவில் அழகிய வடிவில் அமைந்துள்ளது.