

மனஉறுதியுடன் சமாளிப்பீர்கள். மே மாதம் மத்தியப் பகுதிக்குப்பிறகு மந்த நிலை மாறும். நவம்பர் பாதியில் யோகங்களும் அதிர்ஷ்டமும் மெல்ல அதிகரிக்கத் துவங்கும். என்னதான் ஏழரைச் சனி என்றாலும் மன உறுதியுடன் சமாளிப்பீர்கள்.
வீட்டில் நவீன உபகரணங்கள் சிலவற்றை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரச் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் லாபம் தரும். மே மாதவாக்கில் வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்தத் தகவல் சாதகமாக வரும். பணவரவு மெதுமெதுவாகக் கூடும். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள். அலுவலகவாசிகளுக்குக் கடந்த சில மாதங்களாகத் தள்ளிப்போன நன்மைகள் விரைவாய் நடந்து வியக்கவைக்கும். உங்களின் குழந்தைகளின் சிரமங்கள் விரைந்து தீரும். பெண்கள் முன்னேற்றத்தில் வருடத்தின் ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் போகப்போக மனம் மகிழும்படியான முன்னேற்றங்கள் இருக்கும். குடும்பத்தில் சில விஷயங்கள் தடை தாமதங்களுடன் நடந்தாலும் முடிவு சுபமே.
2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொண்டுவிட்டாலே போதும். ஜெயித்த மாதிரிதான். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்படியான விஷயங்கள் நடைபெற்று நிறைவு தரும். நீண்டநாட்களுக்குப் பின்னர், ஐப்பசி மாதவாக்கில் விட்டுப்போயிருந்த தொடர்பு மீளும். பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். ஆண்டு முழுவதும் நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பது விளங்கும்.
தை மாத வாக்கில் குடும்பத்தில் சுப விஷயங்கள் நடைபெறுவதற்கான ஆரம்ப முயற்சிகள் சந்தோஷம் தரும். புது வீடு கட்டிக் குடியேறும் பாக்கியம் ஏற்படும். இது நாள் வரை போராடி வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக வெற்றி அடையும். குடும்பச் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் பலவும் வெற்றி அடையும். இளம் வயதினருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். புத்திரப்பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். பல காலம் ஏங்கிக் காத்திருந்த ஏதோ ஒரு நன்மை கைக்கு எட்டி நிறைவளிக்கும். நீங்கள் எதிர்பாராத வேகத்தில் விஷயங்கள் நடக்காது என்றாலும், நல்லமுறையில் நடைபெறும். குடும்பத்தில் உள்ள பெரியோருக்கு மருத்துவத் தேவை ஏற்படலாம். எனவே, மனதைத் தயார்நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
மற்ற ராசிபலன்களை படிக்க Click Here