அறிந்து கொள்வோம் ராகு-கேது கிரகத்தை!

ராகு கேது
ராகு கேது
Published on

கத்தை ஆளக்கூடிய சக்தி படைத்தவர்கள் ராகு-கேது கிரகங்கள். இவர்கள் நிழல் கிரகங்கள் கிடையாது. நிழல் கதிர்கள். ராகு பகவான் கரு நாகப்பாம்பு, கேது பகவான் செம்பாம்பு. ‘செம்பாம்பே உன்னை சிரம் தாழ்த்தி பணிகிறேன்’ என்று கேதுவுக்கு ஒரு ஸ்லோகமே உள்ளது.

பரிபூரண சூரிய கிரகணம் ராகு, பரிபூரண சந்திர கிரகணம் கேது. பரிபூரண அமாவாசை ராகு, பரிபூரண பௌர்ணமி கேது. சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும்தான் ராகுவும், கேதுவும். ஒரு சூரிய கிரகணத்துக்கும், சந்திர கிரகணத்துக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம்தான் ராகு-கேது பெயர்ச்சி. ஒன்றரை வருட ராகு-கேது பெயர்ச்சி காலம் என்பது, ஒரு சூரிய கிரகணத்துக்கும் அடுத்த சூரிய கிரகணத்துக்கும் இடையில் உள்ள காலம்தான். அக்காலத்தில் நமது முன்னோர்கள் ஒரு மாதத்தை, ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட காலமெனக் கணக்கிட்டார்கள்.

ராகு வைரஸை பரப்பக்கூடியது. கேது வைரஸை அழிக்கக்கூடியது. ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி. பில்லி, சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை போன்ற விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம். பில்லி, சூனியம், ஏவல், மாந்திரீகம், செய்வினை போன்றவற்றை அமாவாசையில் ஏன் செய்கிறார்கள் ஏனென்றால், அமாவாசைதான் ராகு. அமாவாசையில்தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும். அதனால்தான் இவற்றை ராகுவின் நாளான அமாவாசையில் செய்கிறார்கள்.

கேது யாகத்துக்கு அதிபதி. ஆன்மிகத்துக்குக் காரணமான கிரகம். அதனால்தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்புப் பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகைச் செடிகள் அல்லது மூலிகைகளைப் பறிக்கவும் செய்கிறார்கள். பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமியில் அதிகமாக விழும். அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள்.

ராகு கேது
ராகு கேது

ராகு நம்முடைய மூதாதையர்கள். அதனால்தான் மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம். அமாவாசையே ராகு பகவான்தான். அதேபோல், கேது முக்திக்கு அதிபதி. உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன் ஒருவருக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை சொல்பவர் கேது பகவான்தான். அதைப்போலவே, கேது தோஷம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு பிறப்பு, இறப்பு கிடையாது.

ராகு தீராத ஆசை உடையவன். கேது தீராத கடமை உள்ளவன். ராகு போன ஜன்மத்தில் நமக்குத் தீராத ஆசையை எடுத்துச் சொல்லும். கேது போன ஜன்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்துச் சொல்லும். ராகு பகவானுக்கு வெறும் தலை மட்டும்தான். வெறும் தலை மட்டும் கொண்ட ராகு பகவானுக்கு போதும் என்பதே கிடையாது. எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான் அந்த ஆசையை ராகு கிரகம் நிறைவேற்றிக் கொள்ளும். அதனால்தான் தீராத ஆசை உடைய ஆவிகள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடுத்தவர்களின் உடம்புக்குள் சென்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com