நம் அன்றாட நடவடிக்கைகளில் எதெல்லாம் கெடும்? எதனால் கெடும்? ஔவையாரின் 60!

நாம் நம் வாழ்க்கையில் புறக்கணித்து இழக்கும் 60 விஷயங்களை ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறார் ஔவை!
Avvaiyar advice
Avvaiyar
Published on
deepam strip
deepam strip

நம் வாழ்க்கையில் நம் அன்றாட நடவடிக்கையில், நாம் தெரிந்தே புறக்கணிக்கும் சில விஷயங்களால், நமக்குதான் கேடு வந்து சேரும். அப்படி என்ன விஷயமெல்லாம் கெடும், எதனால் கெடும்?

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, விநாயகர் அகவல், மூதுரை, ஞானக்குறள் என்று பல நூல்களை இயற்றியுள்ளார் ஔவையார் (Avvaiyar). நாம் புறக்கணித்து இழப்பவற்றை அவர் ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறார்:

1. பராமரிக்காத பயிரும் கெடும்; 2. பாசத்தினால் பிள்ளை கெடும்; 3. திரும்பக் கேட்காத கடனும் கெடும்; 4. உதவி கேட்கும்போது உறவு கெடும்; 5. தேடாத செல்வம் சேராமல் கெடும்; 6. திகட்டினால் விருந்து கெடும்; 7. தொடர் பயிற்சி இல்லாத கல்வி கெடும்; 8. ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்; 9. நீண்டநாள் சேராத உறவும் கெடும்; 10. சிற்றின்பத்தால் பெயர் கெடும்.

11. நாடாத நட்பு கெடும்; 12. நயமில்லா சொல்லும் கெடும்; 13. கண்டிக்காத பிள்ளை கெடும்; 14. கடன்பட்டால் வாழ்வு கெடும்; 15. பிரிவால் இன்பம் கெடும்; 16. மிகைப் பணத்தால் அமைதி கெடும்; 17. சினத்தால் அறம் கெடும்; 18. சிந்திக்காத செயல் கெடும்; 19. சோம்பலால் வளர்ச்சி கெடும்; 20. ஆர்வமில்லா வேலை கெடும்; 21. மோகத்தால் முறைமை கெடும்; 22. முறையில்லாது பழகும் உறவும் கெடும்; 23. அச்சத்தால் வீரம் கெடும்; 24. அறியாமையால் பணி முடிவுறாது கெடும்; 25. உழாத நிலம் கெடும்; 26. உழைக்காத உடல் கெடும்; 27. இறைக்காத கிணறு கெடும்; 28. இயற்கையை அழிக்கும் நாடு கெடும்; 29. இல்லாளில்லா வம்சம் கெடும்; 30. இரக்கமில்லா மனிதம் கெடும்.

31. தோகையினால் (பெண் இச்சையால்) துறவு கெடும்; 32. துணையில்லா வாழ்வு கெடும்; 33. ஓய்வில்லா முதுமை கெடும்; 34. ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்; 35. அளவில்லா ஆசை கெடும்; 36. இலக்கில்லா பயணம் கெடும்; 37. உண்மையில்லாத காதல் கெடும்; 38. உணர்வில்லாத இனம் கெடும்; 39. செல்வம் போனால் சிறப்பு கெடும்; 40. சொல் பிறழ்ந்தால் கீர்த்தி கெடும்.

41. தூண்டாத திரியும் கெடும்; 42. தூற்றிப் பேசும் உரையும் கெடும்; 43. காய்க்காத மரம் கெடும்; 44. காடழிந்தால் மழை கெடும்; 45. குறி தவறினால் வேட்டை கெடும்; 46. குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்; 47. வசிக்காத வீடு கெடும்; 48. வறுமை வந்தால் எல்லாம் கெடும்; 49. குளிக்காத மேனி கெடும்; 50. குளிர்ந்து போனால் உணவு கெடும்.

இதையும் படியுங்கள்:
தீராத நோய்களை தீர்க்கும் அய்யர் மலை ஆலயம்! அபிஷேகப் பால் தயிராக மாறும் அதிசயம்!
Avvaiyar advice

51. பொய்யான அழகு கெடும்; 52. பொய்யுரைத்தால் புகழ் கெடும்; 53. துடிப்பில்லா இளமை கெடும்; 54. துவண்டால் வெற்றி கெடும்; 55. தூங்காத இரவு கெடும்; 56. தூங்கினால் பகலும் கெடும்; 57. கவனமில்லா செயலும் கெடும்; 58. கருத்தில்லா எழுத்தும் கெடும்; 59. இச்சையினால் உள்ளம் கெடும்; 60. அச்சப்படும் கோழை கெடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com