மூச்சு விடும் மூலவர்! என்ன அதிசயம் பாருங்களேன்!

Vadapalli Lakshmi Narasimha
Published on

கருவறையில் நரசிம்மர் சுவாமி விடும் மூச்சுக்காற்றால் தீபச்சுடர் அசைந்தாடுகிறது இந்த அதிசய கோவில் ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வட பள்ளியில் உள்ளது .

கிருஷ்ணா - மூசி நதிகள் இணையும் இடத்திற்கு அகத்தியர் வந்தபோது வானில் அசரீரி ஒலித்தது. "அகஸ்தியரே நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசிம்மரின் சிலை ஒன்று உள்ளது. அதை பிரதிஷ்டை செய்த பிறகு உமது தீர்த்த யாத்திரை தொடருங்கள்" என்றது. அதன்படி அகத்தியரும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

நாளடைவில் இங்கு வழிபாடு இல்லாமல் போகவே சிலை மண்ணுக்குள் புதைந்தது. நான்காம் நூற்றாண்டில் ரெட்டி ராகலூ என்பவரால் நரசிம்மர் சிலை மீண்டும் வெளிப்பட்டது. 1377 இல் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது.

சுவாமி சிலையில் இருந்து மூச்சு வெளிப்படுவதை பூஜை செய்த அர்ச்சகர் உணர்ந்தார். அதை சோதிக்க மூக்கின் அருகில் விளக்கை பிடித்த போது சுடர் அசைந்தது. அதே நேரம் சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம் அசையாமல் இருந்தது. இன்றும் விளக்கு இப்படி எரியும் அதிசயத்தை நாம் காணலாம்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான தோற்றம் கொண்ட பெருமாள் கோவில்கள்!
Vadapalli Lakshmi Narasimha

ஆந்திராவில் உள்ள நல்கொண்ட கிருஷ்ணா குண்டூர் மாவட்டத்தினர் இங்கு வழிபட்ட பிறகு, மற்ற நரசிம்மர் தலங்களுக்கு செல்கின்றனர். ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுதை சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன. மகாலட்சுமி தாயார் தனி சன்னதியில் இருக்கிறார். கருடன், அனுமன் வாகனங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. ஆன்மீக உபன்யாசகர் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் 1992ல் யாகம் நடத்தினார். அதன்பின் இந்த கோவில் பிரபலமானது. பஞ்ச நரசிம்ம தலங்களில் இதுவே முதல் கோவில். அளவில் சிறியது என்றாலும் உயிரோட்டம் உள்ள நரசிம்ம தரிசனத்தால் பக்தர்கள் பரவசத்தில் மூழ்குகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com