கடக ராசி: தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2026!

2026 பராபவ வருஷத்துக்கான தமிழ்ப் புத்தாண்டுப் ராசிபலன்!
Cancer - Tamil New year Rasi palan 2026
Cancer - Tamil New year Rasi palan 2026
Published on
Deepam strip
Deepam strip

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்த கதையாக (அது என்ன கதை என்று கேட்காதீர்கள். தெரிந்தால் சொல்லமாட்டேனா?) இத்தனைக் காலம் இந்த ராசிக்கு குரு பகவான் ஒளிந்து விளையாடினார். இனி உங்கள் ராசிக்குள் வந்து தன் பார்வைகளால் ஜாலங்கள் செய்யப்போகிறார். பார்த்துக்கொண்டே இருங்கள்...

சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்குக் கிடைக்கும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலை காணப்படும். அதையும்விடக் குழந்தைகள் வாழ்வில் மேஜிக்போல் நன்மைகள் நடைபெற ஆரம்பித்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்களின் ஆரோக்கியச் செயல்பாடுகள் இருக்கும்.

தந்தை வழி சார்ந்த உறவினர்களால் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டுப் பெற வருவார்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம். ஆண்டின் பிற்பகுதியில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் மறைமுகத் தொல்லைகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்

உத்தியோகஸ்தர்கள், அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களைத் தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளைச் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். தொழிலதிபர்கள் ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பைப் பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். தொழில் மேன்மைக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை துவக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுவார்கள்.

புதிய வீடு அல்லது மனை வாங்கக்கூடிய வாய்ப்பு கூடிவரும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

பெண்கள் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவீர்கள். திருமண வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பெண்களுக்குச் சரியான வரன் அமையும். மாணவர்கள் தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும்வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

ஆண்டின் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு தெரியும். பிள்ளைகள் வழியில் நன்மை ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். உங்கள் ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். 

இந்த வருடம் முன்அளவுக்குக் கடன் பிரச்னைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பண வசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமானப் போக்கு காணப்படும். விருந்து நிகழ்ச்சிகளால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி களை கட்டும். உங்க பழைய பொறுமைக்கெல்லாம் நற்பலன் கிடைக்கப்போகுதுங்க. மற்றவர்களை எந்த அளவுக்கு நம்பலாம் என்று புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொள்ளுங்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். தந்தையின் வாழ்வில் தடை தாமதங்கள் நிகழ்ந்தாலும் பரிகாரம் மூலம் சரியாகும்.

இந்த வருடம் தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படுவார்கள். வேலையில் திறமைக்குப் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு ஓரிரண்டு நாட்களில் சுமுகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இடையூறுகள் ஏற்பட்டாலும், முயற்சிகளை அதிகரிப்பதன்மூலம் அவற்றை முறியடித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும் விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இந்த ஆண்டு திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கப்பெறும். கண்டகச் சனி நடப்பதால் புகைப்பிடித்தல், மது குடித்தல் போன்ற நச்சுத்தன்மை பொருந்தியவற்றை உபயோகப்படுத்துல் கூடாது. தம்பதிகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் செயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.

வருடத்தின் பிற்பகுதியில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான வருஷமாக இருக்கும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள், துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் நெருக்கமும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.

வியாபாரிகள் பொருட்களைக் குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்களுக்குச் சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் முழுவதுமாய்க் கிடைக்காவிட்டாலும் ஓரளவாவது கிடைப்பது மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கினாலும் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்தக் கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சிப் பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான பொருளாதாரம் கிடைக்கப்பெற்று தகுதியான செலவுகளைச் செய்து நற்பெயர் பெறுவீர்கள். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் பேசுவது நல்லது.

பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனக்குழப்பம் நீங்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படாது. கவலை வேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்க நினைத்தும் முடியாமல்போன நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால் பிரச்னை இருக்காது. சக பணியாளர்களிடம் சற்றே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாகவே சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எனினும் நிறைய உழைக்க வேண்டிவரும். அதனால் என்ன? சந்தோஷமாய், ஈடுபாட்டுடன் உழைப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள் . புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

மற்ற ராசிபலன்களை படிக்க Click Here

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com