ஆலய அதிசயம் - நிழல் விழும் ரகசியம்; புரியாத அதிசயம்!

Chaya Someswara Temple
Chaya Someswara TempleImg Credit: Wikipedia
Published on

நிழல் விழும் ரகசியம்; புரியாத அதிசயம்! அதென்னங்க அதிசயம்?

இருங்க பாஸ். அவசரப்படேல். வாங்க, ஹைதராபாத் போகலாம். அங்க இந்த அதிசயத்தைப் பார்க்கலாம்.

என்னங்க புதிர் போடறீங்க?

அமைதி, அமைதி, இதோ ஹைதராபாத் வந்திட்டோம். இங்கேருந்து ஜஸ்ட் 100 கிலோ மீட்டர் போவோம். நலகொண்டா மாவட்டத்ல பனகல்னு ஒரு இடம் வருதா, இங்கே அதோ தெரியுது பார்த்தீங்களா, ஒரு கோவில், அதுக்கு சாயா சோமேஸ்வரர் கோவில்னு பேரு. ‘சாயா‘ன்னா ‘நிழல்‘னு அர்த்தமுங்கோ! கோயில் கோபுரங்கள்லாம் பிரமிடு டைப்ல கட்டியிருக்காங்க, பாருங்க.

அதுசரி, அந்த நிழல் எப்படி நிஜமாகுது?

மறுபடியும் பொறுமை. வாங்க கோவிலுக்குள்ளாறப் போகலாம். 10ம் நூற்றாண்டில் குண்டூர் சோழர்களால கட்டப்பட்ட கோவில் இது. இங்கே ‘ஃ‘னா வடிவில மூணு கருவறைகள் தெரியுதே, இங்கதான் இருக்கு மர்மமே!

முதல் கருவறையில் சோமேஸ்வரர் லிங்க வடிவமாக கிழக்கு திசை பார்த்தபடி இருக்கார். இவருக்குப் பின்னால ஒரு நிழல் விழுது, பார்க்கறீங்களா? 

நிழல் விழறது பெரிய அதிசயமா, போங்க சார்..

Chaya Someswara Temple
Chaya Someswara Temple

இருங்க. இங்கேயே நீங்க எத்தனை மணி நேரம் நின்னாலும், இந்த நிழல் மறையவே மறையாது. ஏன், ராத்திரியில கூட! பொதுவா சூரியன் நகர நகர, நிழலும் நகரணும்தானே? இங்க அதுதான் இல்லே! சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரைக்கும் இதே நிழல் கொஞ்சமும் நகராம இப்படியே இருக்கும்!

அதோட, இந்தக் கருவறைக்கு முன்னால் நான்கு தூண்கள் இருக்கு, பார்க்கறீங்களா? இந்தத் தூண்கள்ல எதனோட நிழல் கருவறையில் விழுதுன்னு விழுந்து, விழுந்து ஆராய்ச்சி பண்றாங்க, பண்றாங்க, பண்ணிகிட்டே இருக்காங்க… அது மட்டுமல்ல, நீங்க இந்த தூண்கள் பக்கத்திலே போய் நில்லுங்களேன், கருவறைக்குள்ள உங்க நிழல் விழவே விழாது, தூண் நிழல் மட்டும்தான் விழும்!

அட, செமயா இருக்கே!

ஆமாம், இதோ இந்த விஷ்ணு கருவறை வடக்கு நோக்கி இருக்கு பாருங்க, அதுக்கு எதிரில் போய் நில்லுங்களேன், சாதாரணமா உங்களோட நிழல் ஒண்ணுதானே விழணும்? ஆனா இங்கே உங்களோட நாலு நிழல் விழுது பாருங்க, எப்படி?

இதையும் படியுங்கள்:
ஆயிரம் கதைகள் சொல்லும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்கள்!
Chaya Someswara Temple

ஐயோ, படு த்ரில்லிங்தான் போங்க!

இன்னொரு சூப்பர் ஷேடோ மாஜிக் இருக்கு. அது சூரிய நாராயணர் கருவறைங்கற மேற்கு திசை பார்த்த மூன்றாவது சந்நதியில நடக்குது. ஆமாங்க, நீங்க நிற்கறீங்க. உங்களுக்குப் பின்னால வெளிச்சம்னா, உங்க நிழல் உங்களுக்கு முன்னாலதானே விழணும்? இங்க அதான் இல்லே. உங்களுக்குப் பின்னாலயே விழுது பாருங்க! அது எப்படி இங்க மட்டும் எப்போதும் நமக்கு எதிர் திசையில நம்ம நிழல் விழுது? 

புரியலியே!

உங்களுக்கு மட்டுமல்ல, கட்டடப் பொறியாளர்களுக்கும்கூட புரியல. சாளுக்கியர் காலத்ல இந்தக் கோவில் கட்டின ஆர்க்கிடெக்ட் வந்து அவரா சொன்னாதான் மர்மம் அவிழும். 

சரி, சரி பிரமிச்சது போதும், கோவில்ல இருக்கற விநாயகர், குமாரசுவாமி, யோகினி மாதா, நடராஜர், பைரவர், காளி மாதான்னு நிறைய கடவுளர்கள் நமக்கு அருள் பாலிக்கக் காத்துகிட்டிருக்காங்க. அவங்களையும் தரிசித்து விடலாம், வாங்க, வாங்க…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com