தன்தேரஸ் அன்று துடைப்பம் வாங்கினால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியப்படுத்தும் ஆன்மீக ரகசியம்!

தன்தேரஸ் திருநாளில் துடைப்பம் வாங்குவதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் ஆன்மீக மற்றும் ஜோதிட காரணங்கள்.
தன்தேரஸ் துடைப்பம் - Dhanteras broom significance
தன்தேரஸ் துடைப்பம் - Dhanteras broom significanceImage credit: Gemini
அகிலா சிவராமன்

அகிலா சிவராமன் 1995 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். கட்டுரைகளும் கதைகளும் கிட்டத்தட்ட 500க்கும் மேல் வெளி வந்துள்ளன. இறைவன் மீது பல பாடல்களை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதை 'புயலின் மறுபக்கம்' 2025 ஜனவரியில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். 'கல்கியில் எழுத ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய திறன் என்னவென்று எனக்கே தெரிய ஆரம்பித்தது' என்று கூறும் அகிலா, சமூக நலன் அடிப்படையிலும், தேச நலன் அடிப்படையிலும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்.

Updated on: 

தன்வந்திரி திரயோதசி அல்லது தன்தேரஸ் என்றும் அழைக்கப்படும் தன்தேரஸ், வட இந்தியாவில் பின்பற்றப்படும் பூர்ணிமாந்தா நாட்காட்டியின்படி, கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் பதின்மூன்றாவது நாளாகும். தன்தேரஸ் என்ற சொல் 'தன்' மற்றும் 'தேரஸ்' என்கிற இரண்டு சொற்களிலிருந்து உருவானது. தன் என்றால் செல்வத்தையும், தேரஸ் என்றால் பதின்மூன்றாம் நாளையும் குறிக்கிறது

நம்முடைய தமிழ்  நாட்காட்டியின்படி இது ஐப்பசி மாதமாகும்.தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் பின்பற்றப்படும் அமந்தா நாட்காட்டியில், இதே நாள் அஸ்வின் மாதத்தில் வருகிறது. இது ஐந்து நாள் தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளாகும், அன்று உடல் நலத்திற்காக தன்வந்தரி கடவுளை வழிபடுகிறார்கள்.

சூரியன் மறைந்த பிறகு தொடங்கும் முதல் இரண்டு முதல் இரண்டரை மணி நேரமான பிரதோஷ காலத்தில் மாலையில் இந்த தன்தேரஸ் பூஜை கொண்டாடப் படுகிறது. தந்த்ரயோதசி என்று அழைக்கப்படும் இந்த தன்தேரஸ் நாள் தீபாவளி பண்டிகையின் முதல் நாளாக கருதப்படுகிறது.

மேலும் இந்த நாள், ஆரோக்கியம் மற்றும் ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவர் சமுத்திர மந்தன் எனப்படும் புகழ்பெற்ற ஒரு நிகழ்வின்போது கடலில் இருந்து தோன்றி, அழியாமையின் அமிர்தத்தை சுமந்து வந்ததாக நம்பப்படுகிறது.

தன்தேரஸ் அன்று மக்கள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியையும் குபேரனையும் சேர்த்து வழிபடுகிறார்கள். புராணங்களின்படி, சமுத்திர மந்தனத்தின் போதுதான் லட்சுமி தேவி பால் கடலில் இருந்து தோனறியதாகவும் அதனால்  இந்த நாளில் மதிப்பு மிக்க பொருட்களை வாங்குவதற்கு மிகவும் நல்ல நாள் எனவும் கருதப்படுகிறது.

தங்கம், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை கூட மக்கள் இந்த நாளில் வாங்குகிறார்கள், இதனால் கடவுளின் செழிப்பு மற்றும் ஆசீர்வாதங்களை பெறுவதாக கருதப்படுகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் இந்த  தன்தேரஸ் அன்று, வட இந்தியர்கள் துடைப்பம் வாங்குவது வழக்கமாக இருக்கிறது. நான் திருமணமாகி வந்த புதிதில் எங்கள் வீட்டில் பூஜை அன்று தன்தேரஸ் துடைப்பம் வாங்கி கொண்டு வந்தார்கள்.

தன்தேரஸ் துடைப்பம் - Dhanteras broom significance
தன்தேரஸ் துடைப்பம் - Dhanteras broom significanceImage credit: Gemini

இது எனக்கு சற்று வழக்கத்தைவிட மாறான ஒன்றாக தெரிந்தது. இந்த தன்தேரஸ் தினத்திலே துடைப்பத்தை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அது முற்றிலும் உண்மை... அவர்களுடைய பாரம்பரியத்தில் இந்த துடைப்பமானது ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இவர்களை பொறுத்த வரையில், துடைப்பம் என்பது வெறும் வீட்டை சுத்தம் செய்வதற்காக உபயோகப் படுத்தப்படும் பொருள் என்பதற்கும் மேலாக எதிர்மறை மற்றும் நிதி சிக்கல்களை நீக்கும் பொருளாகவும் கருதப்படுகிறது.

இந்த நாளில் துடைப்பம் வாங்கினால் லட்சுமி தேவி உங்கள் வீட்டை விட்டு வெளியேறமாட்டாள் என்றும், செல்வம் மற்றும்  அதிர்ஷ்டத்திற்காக அவள் உங்கள் வீட்டிலேயே வசமிருந்து ஆசீர்வாதங்களை அளிப்பாள் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.

தூய்மைக்காக உபயோகப்படுத்தப்படும் இந்த துடைப்பமானது இத்தகைய அதிர்ஷ்ட கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் ஒரு சில பேர் தன்தேரஸ் அன்று  இரண்டு துடைப்பங்களை வாங்கி, ஒன்றை அவர்களின் வீட்டிற்கு வைத்து கொண்டு மற்றொன்றை தானம் செய்கிறார்கள். இவ்வாறு தானம் செய்வதால் மகிழ்ச்சியும் செழுமையும் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல புறா தங்குதா.. அப்போ உங்களுக்கு அடிக்க போகுது பெரிய ஜாக்பாட்!
தன்தேரஸ் துடைப்பம் - Dhanteras broom significance

தன்தேரஸ் அன்று துடைப்பத்தை வாங்கினால் அது வறுமை மற்றும் பிரச்னைகளை அகற்றும். மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு வழி வகுக்கும். இந்த எளிய சாதாரணமான துடைப்பத்தை வாங்குவதால் கடன்கள் அடைந்து நேர்மறையான அதிர்வுகளைக் கொண்டுவர உதவும் என்றும் நம்பப்படுகிறது.

தன்தேரஸ் அன்று எக்காரணத்தை கொண்டும் இரும்பு பொருட்களை வாங்கக்கூடாது. ஏனென்றால் இரும்பு சனியின் காரணியாக கருதப்படுகிறது. தன்தேரஸ் அன்று இரும்புப் பொருட்களை வாங்கினால் அது,  துரதிர்ஷ்டத்தைத்தரும் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
செல்வம் கொழிக்க துளசி பூஜை… 100 சதவீதம் பலன் தரும் குறிப்புகள்!
தன்தேரஸ் துடைப்பம் - Dhanteras broom significance