கோவிலிலும் வீட்டிலும் நுழைவாயிலைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். என் தெரியுமா?

Temple entrance...
Temple entrance...Image credit - manithan.com
Published on

கோயில் நுழைவாயில் மட்டுமல்ல, நமது வீட்டில் உள்ள நுழைவாயில் படியினையும் மிதிக்கக் கூடாது. வாயில் படியில் மஹாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். வாயில் படியில் இருக்கும் மகாலட்சுமி த்வார மஹாலட்சுமி என்று சொல்வார்கள். வாயிற்படி அமைக்கும்போது அதற்கு கீழே தங்கம், வெள்ளி முதலான பஞ்சலோகத்தையும் முத்து, பவழம் உள்ளிட்ட நவரத்தினங்களையும் வைத்து அதன்மீது வாயில்படியை நிறுத்துவார்கள். வெள்ளிக் கிழமைகளில் நம் வீட்டுப் பெண்கள் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப்பொட்டு வைப்பதும், வாயிற்படியில் விளக்கேற்றி வைப்பதும், விசேஷ நாட்களில் மாலை அணிவித்து வணங்குவதும் மஹாலட்சுமி வாயிற்படியில் வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கையில்தான். 

பெரியோர்களும் சரி, சாஸ்திரங்களும் சரி கோவில் நுழைவாயில் கதவைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.  கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னால் ஆறோ குளமோ இருந்தாலும் சரி, அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டுதான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கை மற்றும் கால்களைக் கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ளுங்கள்.

இப்போதுதான் கடவுளை வணங்குவதற்கு நம்முடைய உடலைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக, கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, கோவில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், வாயிலில் காவலுக்கான நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முதல் நாள் - மங்களம் அருள்வாள் மஹேஸ்வரி!
Temple entrance...

அப்படி அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே செல்லுகிறபோது, இருக்கின்ற நுழைவாயில் படியைக் கடக்கவேண்டும். அந்த படியை தாண்டிச் செல்கின்ற பொழுது, நான் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதுக்குள் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோவிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போலத்தான் வருகின்றேன் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த படியைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

இறைவன் குடியிருக்கும் கோவில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதுதான் ஐதீகம்.

 இனிமேல் கோவிலுக்கு சென்றாலும் வீட்டிற்குள் நுழைந்தாலும் தாண்டியே செல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com