மாங்கனி திருவிழா பற்றி தெரியுமா?

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோவில் சார்பாக ஆண்டு தோறும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று சிறப்பாக மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது.

இது 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் மாம்பழம் தொடர்பாக நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூறும் விதமாக நடக்கும் விழா.

இந்த மாம்பழ திருவிழாவின்போது சுவாமி தேர் வீதி உலா வரும், அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாங்கனிகளை இறைவன் மீது வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.

காரைக்கால் அம்மையாரின் வரலாறு:

காரைக்காலில் வாழ்ந்து வந்த 63 நாயன்மார்களுள் ஒருவரான சிவபக்தை புனிதவதியின் வீட்டிற்கு சிவபெருமான் அடியார் வேடத்தில் வந்து அன்னம் வேண்டினார்.

அப்போது புனிதவதியோ, அவளுடைய கணவன் கொடுத்து வைத்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை அடியாரிடம் கொடுத்து விடுவார்.

பிறகு புனிதவதியின் கணவன் உணவருந்த மாங்கனிகளை கேட்பார். புனிதவதியிடம் மீதம் இருந்த ஒரு மாங்கனியை கணவனுக்குக் கொடுப்பாள். அதன் சுவை மிகவும் இனிமையாக இருக்கவே, இன்னொரு மாம்பழத்தையும் எடுத்து வரச் சொல்லுவார் புனிதவதியின் கணவன்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

இதனால் என்ன செய்வதென்று தெரியாது திகைத்த புனிதவதி, சிவபெருமானிடம் மாம்பழம் வேண்டும் என்று வேண்டி பெற்று கொள்வாள். அதை அவள் கணவனிடம் கொடுக்க அந்த மாங்கனி முன்பு உண்டதை விடவே மிகவும் சுவையாக இருக்கவே. அதைப் பற்றி புனிதவதியிடம் அவள் கணவன் வினவுவார். புனிதவதியும் அதை சிவப்பெருமானிடமிருந்து பெற்ற கதையை கூறுவாள். அதை நம்பாத அவளுடைய கணவன் திரும்பவும் சிவபெருமானிடம் ஒரு மாங்கனியை கேட்டு பெறும்படி கூற, அவ்வாறே புனிதவதியும் கேட்டு பெறுகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புனிதவதியின் கணவனோ அவள் தெய்வப்பிறவி என்று கூறி அவளை விட்டுப் பிரிந்தான்.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் பழத்தில் உள்ள அற்புதப் பயன்களை அறிவோம்!
காரைக்கால் அம்மையார்

இதனால் மனித உடல் வேண்டாம் என்று இறைவனை வேண்டி பேய் உடலை பெற்று பின்பு கையிலாயம் சென்று சிவபெருமானிடம் ஐக்கியமானார்.

காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோவிலே உள்ளது. சிவப்பெருமானே “அம்மையே” என்று அழைத்த காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் நடந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் வருடா வருடம் மாங்கனி திருவிழா நடைப்பெறும்.

இந்த திருவிழாவிற்கு வந்து மாங்கனியை இறைத்து பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு கண்டிப்பாக பிள்ளைபேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

பக்தர்களுக்கு ஆயிரக்கணக்கான மாங்கனிகளை அம்மையாரிடம் வைத்து படைத்து பிரசாதமாக அளிப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com