அபிஷேகப் பால் நீலநிறமாக மாறும் அதிசயக் கோவில் பற்றித் தெரியுமா?


Miracle temple
திருநாகேஸ்வரம்
Published on

திருநாகேஸ்வரத்தில் உள்ள இக்கோவிலில் இருக்கும் ராகு பகவானின் சிலையின் மீது பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறத்தில் மாறும் அதிசயத்தைக் காணலாம். இந்த நிகழ்வைக்காண இக்கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க அதிசயக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் தான் இத்தகைய அதிசய நிகழ்வு நடக்கிறது. இக்கோவில் ஒன்பது நவகிரகங்களில் ஒன்றான ராகுவிற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

இங்குள்ள சிவபெருமானை ‘நாகநாதர்’ என்றும் பார்வதிதேவியை ‘பிறைசூடி அம்மன்’ என்றும் அழைக்கிறார்கள். இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மட்டும் தான் ராகு பகவான் மனித முகத்துடன் காட்சித் தருகிறார். மற்ற கோவில்களில் நாகமுகத்துடன் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புராணக்கதைப்படி, இவ்விடத்தில் ஆதிஷேசன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவரிடம் வரங்களை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலில் உள்ள  சிவனை ‘நாகநாதர்’ என்று அழைக்கிறார்கள். கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் இக்கோவிலில் உள்ள கிரி குஜாம்பிகையை 45 நாட்கள் புனுகு என்னும் வாசனை பொருளை வைத்து வழிப்பட்டு சாபவிமோஷனம் பெற்றார்.

இக்கோவில் மிகவும் பிரபலமடைய காரணம், இங்கேயுள்ள ராகு சிலைக்கு ராகு காலத்தில் செய்யப்படும் பாலாபிஷேகம் நீலநிறமாக மாறும் என்று சொல்லப்படுகிறது. ஆதிஷேசன், கார்க்கோடகன், தக்ஷன் போன்ற நாகங்கள் இக்கோவிலில் உள்ள சிவனை வழிப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அனுமனின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஸ்ரீராமர் புரிந்த திருவிளையாடல்!

Miracle temple

எனவே, இக்கோவிலில் உள்ள ராகு பகவானை வழிபடுவதால், ராகுவால் ஏற்படும் இன்னல்கள், நாக சர்ப்பதோஷம் ஆகியவற்றை நீங்குவதாக நம்பப்படுகிறது. திருமண தடை, குழந்தையின்மை, திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் நீங்கும்.

நாகசர்ப்ப தோஷம் முழுமையாக விலக காலையில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலும், மதியம் திருநாகேஸ்வரம் கோவில், சாயங்காலம் திருபாம்பூரம் கோவில், இரவு நாகூர் நாகநாதர் கோவில் ஆகிய கோவில்களை வழிபட வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிப்பது நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com