அதிசயங்கள் நிறைந்த திரியம்பகேஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா?

திரியம்பகேஸ்வரர் கோவில்
திரியம்பகேஸ்வரர் கோவில்

லயங்கள் அனைத்துமே அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது வியப்புக்குரியது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தை பற்றியும் படிக்கும்போதும் கேட்கும் போதும் கண்களால் காணும் போதும் ஒரு விஷயத்தை நாம் ஈர்க்கப்படுவோம் . சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் சில நம்மை அதிசயிக்க வைக்கும்.

அப்படி நம்மை அதிசய வைக்க வைக்கும் ஆலயங்கள் ஒன்றுதான் மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரியம்பகேஸ்வரர் திருக்கோவில்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திரயம்பகம் என்ற இடம் இங்குதான் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரயம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி நீலகிரி  கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில் பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம் விஸ்வநத் தீர்த்தம் முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான ஆன்மீக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால் பல சித்தர்களும் ரிஷிகளும் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற இடமாக இதனை போற்றுகின்றனர்.

இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய  நீர் ஊற்று ஒன்று உள்ளது. எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

திரியம்பகேஸ்வரர் கோவில்
திரியம்பகேஸ்வரர் கோவில்

பிறர் ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாக கொண்டு அமைந்துள்ளன. ஆனால் இத்தவத்தில் உள்ள லிங்கம் பிரம்மா விஷ்ணு ருத்ரன்  ஆகிய கடவுளின் முகங்கள் போன்ற அமைப்புடன் உள்ளன. தனித்துவமான அம்சமாகும்.

இந்தப் பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் ஜடா முடியில். இருந்த கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும் அதுவே இங்கு எப்போதும் நீர் ஊற்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய  மூவரும் வரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது. திரியம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்ப கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்தில் இருந்து தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்க பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது.

இதையும் படியுங்கள்:
பணக்காரர்களின் 9 விதமான வெற்றி ரகசியங்கள் தெரியுமா?
திரியம்பகேஸ்வரர் கோவில்

ஆவுடையார் உரல் போன்றுபள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுக்களின் அடையாளம் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் வரும்போது இத்தலத்தில் கும்பமேளா பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com