சிவபெருமான் மீது கல்லெறிந்தவரைப் பற்றித் தெரியுமா?

சிவபெருமான் மீது கல்லெறிந்தவரைப் பற்றித் தெரியுமா?
Published on

சிவனின் கண்கள் எங்கிருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதற்காக அவர் முகத்தில் காலை எடுத்து வைத்தவர் கண்ணப்ப நாயனார். அதேபோல, சிவனின் மீது உள்ள அதீத பக்தியால் அவர் மேல் கல்லெறிந்த சாக்கிய நாயனாரை பற்றித் தெரியுமா? இந்த பதிவில் அதைப்பற்றி முழுமையாக காண்போம்.

சாக்கிய நாயனாருக்கு சிறுவயதிலேயே பிறப்பு, இறப்பை பற்றிய ஆழமான தேடல் வருகிறது. அதனாலே காஞ்சிபுரம் வந்து புத்த துறவியாக மாறி புத்த மதநூல்களை முழுமையாக படிக்கிறார். தான் தேடுவது இதில் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறார் சாக்கிய நாயனார். அதற்கு சைவநெறியே வழி என்பதை புரிந்துக் கொள்கிறார். சிவபெருமானின் மீது ஆழமான காதல் பிறக்கிறது. ஆனாலும், சமூகத்தின் கட்டாயத்திற்காக புத்த துறவியாகவே இருக்கிறார்.

ஒருநாள் வழியிலே சிவலிங்கத்தை பார்க்கிறார். அவருக்குள்ளே இதுவரை நிகழாத ஒரு அற்புத நிலை உருவாகிறது. அந்த ஆனந்த உணர்வினிலே அங்கேயே நிற்கிறார். அவருக்கு ஏதேனும் பண்ண வேண்டும் என்று தோன்றுகிறது. உடனே ஏதோ ஒரு உந்துதலில் கீழேயிருக்கும் கல்லை எடுத்து சிவனை நோக்கி எறிகிறார். தினமும் சிவலிங்கத்தை காண வருவார், மெய்மறந்து நிற்பார், கல்லெடுத்து எறிவார்.

ஒருநாள் சாப்பிட அமரும் போதுதான் அன்று கல்லெறியவில்லை என்ற நியாபகம் வருகிறது. உடனே அனைத்தையும்  அப்படியே போட்டுவிட்டு சிவனைக் காண ஓடிவருகிறார். ஒரு கல்லை எடுத்து பெரும் காதலுடன் சிவனை நோக்கி எறிகிறார். அவருடைய களங்கமில்லாத அன்பை பார்த்த சிவபெருமான், பார்வதிதேவியுடன் காட்சி தந்து அவருக்கு முக்தி வழங்குகிறார்.

இதையும் படியுங்கள்:
‘திருநெல்வேலி’ என்று பெயர் வரக் காரணம் தெரியுமா?
சிவபெருமான் மீது கல்லெறிந்தவரைப் பற்றித் தெரியுமா?

சிவனின் மீது காலை வைத்தாலும் சரி, கல்லை எறிந்தாலும் சரி உண்மையான அன்பையும், பக்தியையும் சிவபெருமான் புரிந்துக்கொள்வார் என்பதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

'மறவாது கல் எறிந்த சாக்கியருக்கும் அடியேன்’ என்று சுந்தரர் பாடல் வரிகளில் வரும். சாக்கிய நாயனார் கல் எறிந்து வழிப்பட்ட சிவலிங்கம் காஞ்சிபுரம் அடுத்து உள்ள கோனேரிக்குப்பம் என்ற ஊரில் இருக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானின் நாமம் ‘வீரட்டானேஸ்வரர்’ என்பதாகும். சாக்கிய நாயனார் கல் எறிந்ததற்கு அடையாளமாக இந்த சிவலிங்கத்தின் மேனியில் கல் பட்ட தடம் புள்ளி புள்ளியாக இன்றும் இருக்கிறது. இறைவனின் சன்னதிக்கு எதிரே கல்லுடன் சாக்கிய நாயனாரின் திருமேனியும் காணப்படுகிறது என்பது குப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com