நரசிம்மர் 16 திருக்கரங் களுடன் எழுந்தருளியிருக்கும் கோவில் பற்றித் தெரியுமா?

Lord Narasimha
Narasimha TempleImage Credits: Oneindia Tamil

காவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனி சிறப்பு மிகுந்தது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரம் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டது. ஆனால் நரசிம்ம அவதாரம் தன்னுடைய பக்தனை காக்க எடுக்கப்பட்டதாகும்.

நரசிம்மம் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாகும். நான்காவது என்பது தர்மம். அர்த்த காமநிலைகளை கடந்து மோட்ச நிலையை குறிக்கும். மோட்சத்தையே சுலபமாக கொடுக்கும் நரசிம்மர் எல்லா பிரச்னைகளையும் எளிதில் தீர்த்து வைப்பார். சிங்க முகமும், மனித உடலுமாக அகோபிலம் என்னும் மிக உயர்ந்த மலையில் மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். இந்த ஷேத்திரம் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ளது.

நரசிம்ம அவதாரம் பூமியில் வெறும் 2 நாழிகையே இருந்தது. அதனால் காசியப்பரால் நரசிம்மரை தரிசனம் செய்ய முடியாமல் போனது. இதனால் அவர் கடும் தவமிருந்தார் நரசிம்மரின் அவதாரத்தை தரிசிச்க வேண்டும் என்று அவரின் தவத்திற்கு பலன் கிடைத்தது. மகாவிஷ்ணுவின் அசரீரி ஒலித்தது. பொதிகை மலையில் மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்திரா நதிகரையில் தவத்தை தொடருங்கள். நரசிம்மரின் தரிசனம் காண்பீர்கள் என்று அசரீரி ஒலித்தது.

ரிஷிகளும் அவ்வாறே செய்ய ஸ்ரீதேவி, பூதேவியுடன் 16 கரங்களுடன் நரசிம்ம அவதாரத்தில் காட்சி கொடுத்தார். ரிஷிகளும் நரசிம்மரை அந்த ஸ்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார்கள். அவ்வாறே நரசிம்மர் நிரந்தரமாக அங்கே குடிக்கொண்டு விட்டார்.

நரசிம்மர் நிரந்தரமாக குடிகொண்டுவிட்டதற்கு சாட்சியாக தினமும் சிங்க கர்ஜனை ஒலித்துக் கொண்டேயிருக்குமாம். நரசிம்மரின் ஆக்ரோஷத்தை குறைக்க தெப்பங்குளமும், பானகம், இளநீர் போன்ற அபிஷேகம் நரசிம்மருக்கு செய்ய அந்த சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி மக்கள் கேட்டு வந்துள்ளனர் என்பது செவி வழி செய்தி.

ரிஷிகள் தவம் புரிந்த இடத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் அமைந்துள்ள இடம்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கீழப்பாவூர். மன்னர்கள் காலத்தில் இவ்வூர் சத்ரிய சீகாமணியூர் என்று அழைக்கப்பட்டது. இங்கே நரசிம்மரை வழிபட்டால் எதிரிகளை அழித்து நமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை வழங்குவார். நரசிம்மர் சினத்தை தணித்த தீர்த்த குளம் அமைந்துள்ளது. கங்கா, நர்மதா, நரசிம்ம புஷ்கரணி என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின் மீது நரசிம்மரின் அருள் பார்வை எப்போதுமே உள்ளது.

இதையும் படியுங்கள்:
பருவநிலை மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வது எப்படி?
Lord Narasimha

இந்த தீர்த்தத்தை தெளித்துக் கொண்டால் வேண்டாத கோபம், பதற்றம், கவலை நீங்கி மனநிம்மதி கிடைக்கும். ஸ்வாதி பூஜை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

ஸ்வாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி, செல்வம் சேரும், வியாபாரம் பெருகும், திருமணத்தடை நீங்கும், நீதிமன்ற வழக்கு முடியும், கடன்தொல்லை தீரும். நரசிம்மரை வழிப்பட செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் உகந்தவையாகும்.

நரசிம்மருக்கு பிரியமான பானகம் படைத்து வணங்கினால், முழு அருளும் கிட்டும். நரசிம்மர் இங்கே ஆக்ரோஷமாக உள்ளார். ஆக்ரோஷம் என்றால் முழு ஆற்றல் பொருந்தியவர் என்று பொருள். எனவே இங்கு வழிப்பட்டால் ஆயிரம் மடங்கு பலனை தரும். கருங்கல் புடைப்பு சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபட்டால் எப்பேற்பட்ட பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்கும். தக்ஷிண அகோபிலம் என்று அழைக்கப்படும் இந்த திரிபங்க நிலையில் ஹிரண்யசம்காரம் நிலையில் 16 திருகரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com